தமிழக வெற்றி கழகத்தை விடுங்க! விஜய்க்கு 2026ல் டஃப் கொடுக்க கட்சி தொடங்கும் முன்னணி ஹீரோ! சபாஷ்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
என்.டி.ராமாராவ், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து சாதிக்கவும் செய்தனர். அந்த வரிசையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அவருடைய ரசிகர்கள் தவமிருந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அந்த முடிவை கைவிட்டார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் போட்டியிட்ட போது அந்த தேர்தல்களில் வாக்கு சதவீதம் நன்றாக இருந்தது.
ஆனாலும் அவரும் சரி அவருடைய கட்சியினரும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லி அவர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஷாலும் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கெனவே அரசியல் பணிகளில் விஷால் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார்.
ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக அதிகாரிகளிடம் விஷால் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என பெயர் மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறாராம். அது போல் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது அங்குள்ள அவரது ரசிகர்களை சந்திப்பதையும் கிராமத்தினரின் குறைகளை கேட்டறிவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளாராம். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க விஷால் முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் சட்டசபை தேர்தலில் விஷால் கட்சியும் போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications