"இவரா".. ஓ. வசந்த "ராஜா".. காலியாகும் அடுத்த விக்கெட்டுகள்".. 30 பேரா?.. சசிகலா Vs எடப்பாடி Vs பாஜக
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சசிகலா புது கட்சி ஆரம்பிக்க போகிறாராம்
சென்னை: சசிகலா எடுக்க போகும் அடுத்தடுத்த அதிரடிகள், எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் நிலைகுலைய வைத்துவிடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அரசியல் பயணத்தை அதிரடியாக துவக்கவிருக்கிறார் சசிகலா. அதனை வெளிப்படையாக அவர் சொன்னதைத் தொடர்ந்து, சசிகலாவின் சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் தொடர்புகொண்டு விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்.
ஓய்வு பெற்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சசிகலாவின் சிபாரிசில் முக்கியத் துறைகளில் கோலோச்சியவர்கள். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள்.

செல்வாக்கு
அந்த வகையில், ஜெயிலில் சசிகலா விடுதலையான பிறகு அவருக்கும் சம்பளம் வாங்காத ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். அவர்களிடம் எதிர்கால அரசியல் குறித்து சசிகலா தொடர்ந்து விவாதித்துள்ளார்.. அப்போதுதான் தனிக்கட்சி என்ற தன்னுடைய புது ஐடியாவை அவர்களிடம் சொல்லி உள்ளார் சசிகலா.. அதற்கு ஆலோசனையாளர்கள் வேண்டாம் என்று அவரை தடுத்துள்ளனர்.

தனிக்கட்சி
அதாவது, "தனிக்கட்சி என்பது போகாத ஊருக்கு வழி சொல்வது. ஏற்கனவே தினகரன் கட்சி ஆரம்பித்து என்ன நிலை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் தனிக்கட்சி துவக்குவது இன்றைய சூழல்களுக்கு சரிபட்டு வராது. அதிமுகவின் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதற்கு என்ன வழிகள்? என்ன யுக்திகள்? என்பதை ஆராய்வதுதான் ஆரோக்கியமானது. அதிமுகவில் உங்களுக்கு தடையாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான். அவரது டெல்லி பாசத்தை உடைத்து டெல்லியின் ஆதரவை முழுமையாகப் பெற முயற்சியுங்கள். அதுதான், வெற்றியை தரும் என்றார்கள்.

எம்எல்ஏக்கள்
இதற்கு பிறகு சசிகலா மனமாற்றம் அடைந்தார்.. மேலும், அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.. கட்சி தலைமைக்கு எதிராக மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்தால் கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது என்பது விதிமுறை.. இப்போதைக்கு சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 22 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக சசிகலாவை ஆதரித்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாது. அதனால் 30 எம்எல்ஏக்களை குறி வைத்து சசிகலா தரப்பு பேர அரசியலை கையில் எடுத்துள்ளது.

திடீர் பயணம்
அதேசமயம், தனிக்கட்சி வேண்டாம் என்று யோசித்த நிலையில், மீண்டும் கட்சியை துவங்குவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் சசிகலா வந்துள்ளாராம்.. அதற்காவே மதுரை பயணத்தை குறி வைத்துள்ளாராம்.. 10ம் தேதி மதுரைக்கு பயணம் மேற்கொளவதுடன், அன்றைய தினம் தன்னுடைய பயணத்தையும் அறிவிக்க போகிறாராம்.. இந்த பயண ஏற்பாடு உள்ளிட்ட அனைத்துக்கும் பின்னணியில் இருந்து முனைப்பாக ஈடுபட்டு வருவது யார் தெரியுமா?

ஓ.ராஜா
அன்று சசிகலாவை சென்று சந்தித்து, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட ஓ.ராஜாதானாம். அதுமட்டுமல்ல, இந்த பயணம் முடிந்ததுமே ஒரு மாநாடு நடத்த போகிறாராம். இந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய நபர்கள் யார் என்றால், சசிகலாவை சந்தித்ததால்,ரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்களோ, அவர்கள் எல்லாருமே இதில் கலந்து கொள்ள போகிறார்களாம்..

எடப்பாடி பழனிசாமி
போதாக்குறைக்கு அதிமுகவின் அதிருப்திகள், திமுகவின் அதிருப்திகள், அமமுகவின் அதிருப்திகள், இதை தவிர, சில மாஜி அமைச்சர்கள், குறிப்பிட்ட அளவு அதிமுக எம்எல்ஏக்கள் என ஒரு பெரிய குரூப்பே அணி திரள போகிறதாம்... இதை ஒரு மாநாடு போல நடத்துவதா? அல்லது பொதுக்கூட்டம் போல நடத்துவதா? என்ற யோசனை நடந்து கொண்டிருக்கிறதாம்.. சசிகலாவின் இந்த விஸ்வரூப வளர்ச்சி, நிச்சயம் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி தரப்புக்கு கலக்கம் தரும் என்றாலும், திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜகவுக்கும் கலக்கம் தரும் என்றே சொல்கிறார்கள்.. பார்ப்போம்..
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications