‛எஸ்சி' என்பதால் ஸ்டாலினை சந்திக்க விடமாட்டீர்களா? அறிவாலயத்தில் திமுக மாஜி எம்எல்ஏ வாக்குவாதம்
சென்னை: ‛‛நான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கீர்களா? என்று சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவின் தலைமை அலுவலகமாக சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் திமுகவின் கட்சி சார்ந்த பல்வேறு கூட்டங்கள் முதல்வரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும்.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இன்று அண்ணா அறிவாலயத்துக்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் வந்திருந்தார்.
முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் அண்ணா அறிவாலயத்தின் வாயிலில் நின்றவர்கள் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமான ஆடலரசன், ‛‛பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது பையில் இருந்த திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டையை தூக்கி தரையில் வீசியெறிந்து வெளியே சென்றார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆடலரசனை சமாதானம் செய்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். முன்னதாக பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி கேட்டு ஆடலரசன் வாக்குவாதம் செய்தது அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்குவாதம் செய்த ஆடலரன் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர் மொத்தம் 72,127 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் உமாதேவி 58,877 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆடலரசன் விரும்பினார். அதற்கு காய் நகர்த்தினார். ஆனால் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. தனது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த தொகுதி வழங்கப்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க. மாரிமுத்து வேட்பாளராக போட்டியிட்டு 97,092 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சி சுரேஷ் குமாரை (பெற்ற வாக்குகள் 67,024) வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications