வடசென்னை அருகே எத்தனை மணிக்கு காற்றழுத்தம் கரையை கடக்கிறது.. இதோ விண்டியின் செயற்கைகோள் வீடியோ
சென்னை: சென்னையில் இன்று இரவு 9 மணிஅளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என விண்டி செயற்கைகோள் வீடியோ படங்கள் காட்டுகின்றன.
வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக புயல் என்றால் நேரம் கணிக்கப்படும். அது போல் அங்கு எங்கு கரையை கடக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பாதிப்புகள் இருக்கும். ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த நேரத்தில் கரையை கடக்கும் என்பது கணிக்க முடியாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலை விட அதிகம்
இதன் பரப்பளவு புயலை விட அதிகம் என்பதால் அது சுற்றி சுற்றி போகும் இடமெல்லாம் பாதிப்பை உண்டு செய்யும். இந்த நிலையில் இந்த காற்றழுத்தம் இரவு 9 மணிக்கு கரையை கடக்க தொடங்குகிறது என விண்டி டிவியில் வீடியோ காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தம் சென்னை- நெல்லூர் இடையே கரையை கடக்கிறது.

மதியம் 1 மணி
இது தற்போது சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இது மதியம் 1 மணி முதல் நகரத் தொடங்கியுள்ளது. வடதமிழகத்தின் கடலோரத்தை நெருங்கத் தொடங்கிவிட்டது. பின்னர் படிப்படியாக நகர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சென்னைக்கு மிக அருகில் வந்துவிடுகிறது.

நள்ளிரவு 12 மணி
இரவு சரியாக 8 மணிக்கு காற்றழுத்தத்தின் முன் பகுதி கரையை கடக்க தொடங்குகிறது. இதையடுத்து 9 மணிக்கு நடுபகுதி கரையை கடக்கிறது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு காற்றழுத்தத்தின் வெளி பகுதி கரையை கடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கெல்லாம் காற்றழுத்தம் முழுமையாக கடந்து விடுகிறது.
Recommended Video

கரையை கடக்கும்
எனவே இந்த காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications