ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘சரஸ்வதி பூஜை’ வாழ்த்துகள்
சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இடம் பெறாதது கடந்த ஏப்ரல் மாதம் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், 'ஆயுத பூஜை' மற்றும் 'சரஸ்வதி பூஜை' வாழ்த்துகள் கூறி பால் பாக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து செய்தி வெளியிடப்படுகிறது. விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்து செய்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.

ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் இந்த ஆண்டும் 'ஆயுத பூஜை' மற்றும் 'சரஸ்வதி பூஜை' வாழ்த்துகள் கூறி பால் பாக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில மாதம் முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரமலான் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தி இடம்பெற்று இருந்தது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இடம்பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதுபற்றி அப்போது விளக்கம் அளித்த ஆவின் நிறுவனம், " பல்வேறு விதமான பண்டிகைகளின் போது ஆவின் நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் அப்பண்டிகைகளுக்கான வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக தொடா்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆவின் நிறுவன பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் வாழ்த்துச் செய்தி குறிக்கும் விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவை. அந்தவகையில், தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே, இந்த ஆண்டும் அச்சிடப்படவில்லை " என்று கூறியிருந்தது.
முன்னதாக பால்முகவர் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், 2023 ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் 74வது குடியரசு தினத்துக்கும், ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி தேசிய பால் தினமான கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்தாண்டு அந்நாளில் தேசிய பால் தினம் வாழ்த்து செய்தியும் வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகம் 77வது சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருந்தது என்று குற்றம்சாட்டியிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications