சிபிஐ விசாரணை வளையத்தில் சிஎம்.. அடுத்து என்ன? எஞ்சியிருப்பது 3 வாய்ப்புகள்தான்!
Recommended Video

சென்னை: நெடுஞ்சாலை துறை ஊழல்கள் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த, வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து முதல்வருக்கு இப்போது எஞ்சியிருப்பது 3 சட்ட வழிகள்தான் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை திட்டங்கள் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற ரூ.4800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான பணிகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
[சிபிஐ வளையத்திற்குள் விஜய பாஸ்கரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி.. டெல்லி புள்ளிகள் குஷி! ]

திமுகவிற்கு இன்ப அதிர்ச்சி
இந்த புகாரை சரியாக விசாரிக்காமல் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக தரப்பே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது. ஆம், ஹைகோர்ட், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

அரசியல் அழுத்தம்
முதல்வரே சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டுவர சட்ட ரீதியாக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் வாய்ப்பு இதுதான்
அதில் முதல் வாய்ப்பு இன்று இரவே சுப்ரீம் கோர்ட் வாசலை தட்டுவது. அதாவது, சிபிஐ விசாரணைக்கு தடை கோரி நீதிபதியிடம் முறையிடலாம். இன்றேதான் அதை செய்ய வேண்டுமா என்றால், தசரா விடுமுறை என்பதால், சுப்ரீம் கோர்ட் இனி வரும் 22ம் தேதிதான் திரும்பவும் வழக்கு விசாரணையை ஆரம்பிக்கும்.

மற்ற இரு வாய்ப்புகள்
நீதிபதிகளை அவசரப்பட்டு அணுக வேண்டாம் என்று எடப்பாடி தரப்பு நினைத்தால், 2வது வாய்ப்பு இதுதான். 22ம் தேதி நீதிமன்றம் திறந்ததும், எடப்பாடி தரப்பில் மனு தாக்கல் செய்யலாம். மூன்றாவது ஒரு வாய்ப்பு உள்ளது. எந்த மேல்முறையீடும் செய்யாமல், ஹைகோர்ட் கூறியபடி சிபிஐ விசாரணைக்கு உட்படுவதுதான் அது.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications