டெல்லி ஆதரவு எடப்பாடிக்கு இருக்கு.. அடக்கி வாசிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி பாஜக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வந்த போது அவரை நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி வரவேற்று இருந்தார். இதன்பின் எஸ்பி வேலுமணி ஒரே போடாக எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று பேசி இருந்தார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் மீண்டும் அதிமுகவுக்குள் கலகம் வெடித்தது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தொடங்கினர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். ஆனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தி எம்எல்ஏ-க்களாகவே வலம் வருகின்றனர்.

Edappadi Palaniswami

அதேபோல் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கூட்டு தலைமையை உருவாக்கவும் திட்டமிட்டனர். ஆனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்திற்கு போதுமான ஆதரவு இல்லை. அதேபோல் டெல்லி கதவுகளை தட்டி இருந்தனர். ஆனால் பாஜகவிடம் இருந்து இவர்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இப்படியான சூழலில் தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்திற்கு பின் சென்னை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வரவேற்று இருந்தார். இதன் மூலமாக டெல்லி பாஜக தலைகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக பார்க்கப்பட்டது.

அதேபோல் டெல்லி பாஜக நேரடியாக சில விசாரணையையும் செய்திருக்கிறது. அதன்படி கொங்கு மண்டலத்தில் எஸ்பி வேலுமணிக்கும், வன்னியர் அமைப்புகள் மத்தியில் சிவி சண்முகத்திற்கு செல்வாக்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் டெல்லி தரப்பில் இருவருக்கும் சில எச்சரிக்கையையும் கொடுத்திருக்கிறது.

இதன் காரணமாகவே எஸ்பி வேலுமணி திடீரென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஒரே போடாக பேசத் தொடங்கி இருக்கிறார். சிவி சண்முகமும் அதிமுக எழுச்சி பெற வேண்டும் என்று பேச தொடங்கியுள்ளார். இதனால் இனி அதிமுகவில் அடுத்தக் கட்டமாக என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+