Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் சட்டசபை தேர்தல்! கனிமொழிக்கு ப்ரமோஷன்? "அந்த" விண்ணப்பத்தில் கையெழுத்திட போகிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது கனிமொழி ஆகிய இருவரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே அவருடன் பயணித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் துரைமுருகன். கே.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் துரைமுருகன் வகித்து வருகிறார்.

Amid reports that DMK General Secretary Durai Murugan has been hospitalised political sources suggest that Chief Minister M K Stalin is considering assigning the additional responsibility to either T R Baalu or Kanimozhi The development has sparked speculation within party circles about possible temporary changes in key organisational roles

கடந்த 5 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வரும் துரைமுருகனுக்கு அண்மைக்காலமாக உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

துரைமுருகனுக்கு என்னாச்சு

கடந்த 11 ஆம் தேதி கூட வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை அப்பல்லோவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து விட்டு வந்தனர்.

உடல்நிலை

துரைமுருகனின் உடல்நிலை சீராக இருந்தாலும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் கட்சி, மக்கள் பணி என தனது உடலை வருத்திக் கொள்ளாமல் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

இடைக்கால பட்ஜெட்

அதனால்தான் தற்போது தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் கூட அவரால் வர முடியவில்லை. மேலும் பொதுவெளியில் கூட அவர் வருவது என்பது கடினமானதாகிவிட்டது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பொதுச் செயலாளரின் பங்கு அளப்பரியது. தற்போது அந்த பதவியில் இருக்கும் துரைமுருகனால் முன்பு போல் செயல்பட முடியாது. அதே நேரத்தில் அவரைவிட சிறப்பாக செயல்படுவோரும் வேறு யாருமில்லை என்பது முதல்வரின் எண்ணம்!

உடல்நலனும் முக்கியம்

ஆனால் எல்லாவற்றையும் விட துரைமுருகனின் உடல்நலனும் முக்கியம். இதனால் என்ன செய்யலாம் என முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

திமுக போட்டியிட வேண்டிய தொகுதிகள், வேட்பாளர்கள் ஆகியவற்றையும் தேர்வு செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல், வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரம் உள்ளிட்டவை எல்லாம் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு.

முன்புபோல் செயல்பட முடியாது

ஆனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் இத்தனை பணிகளை உடனடியாக முன்பு போல் ஓடியாடி செய்ய முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டே கட்சி விதிகளில் மாற்றம் செய்யலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.

அதாவது பொதுச் செயலாளர் பதவியை கூடுதலாக கவனிக்குமாறு கட்சியின் நம்பிக்கைக்குரியவரிடம் ஒப்படைக்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்றதும் முதலில் ஸ்டாலினுக்கு நினைவுக்கு வருவது அவரது பாசமிகு தங்கை கனிமொழி.. இன்னொருவர் டி.ஆர்.பாலு.

கூடுதல் பொறுப்பு

இவர்கள் இருவரில் ஒருவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். கனிமொழி துணை பொதுச் செயலாளராக இருக்கிறார். அது போல் டி.ஆர்.பாலு பொருளாளராக இருக்கிறார்.

கனிமொழி

இன்னொரு புறம், துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருக்கு இந்த கூடுதல் பொறுப்பை கொடுக்கவும் யோசனை உள்ளதாம். அப்படி பார்த்தால் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, சாமிநாதன் ஆகியோர் திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக உள்ளனர்.

டி.ஆர்.பாலு

இந்த எழுவரில் நம் குடும்ப உறுப்பினரான கனிமொழியும் இருப்பதால் எப்படி பார்த்தாலும் கனிமொழிக்கு இந்த பொறுப்பை வழங்கலாமா என யோசித்து வருகிறார் ஸ்டாலின். டி.ஆர்.பாலுவும் ஸ்டாலினின் சாய்ஸ் லிஸ்ட்டில் உள்ளாராம். எனவே இருவரில் யாருக்கு அந்த ஜாக்பாட் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+