மாதம் ரூ.250 சேர்த்தால் போதும்! எதிர்காலம் செட்டில் ஆகும்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் எளிமையாக ஒருவர் மாதம் 250 சேர்த்தால் மட்டுமே போதும்.. அவர்களின் பெண் குழந்தையின் வாழ்க்கையை செட்டில் ஆக்கிவிட முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்.

வெறும் ₹250 முதல் முதலீடு செய்யத் தொடங்குங்கள்:

இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் கணக்கைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. வெறும் ₹ 250 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் ₹ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் எதாவது சில வருடங்கள் முதலீடு செய்ய முடியாவிட்டால், ₹ 50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம்.

selvamagal saving scheme selvamagal semippu thittam narendra modi

15 ஆண்டுகளுக்கு முதலீடு, 21 ஆண்டுகளில் முதிர்வு

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், நீங்கள் குறைந்தது 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, மொத்தமாக கணக்கு 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் முதிர்ச்சியடையும். நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்றோர்கள் கூடுதல் முதலீடு செய்யத் தேவையில்லை. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.

64 லட்சம் நிதி எப்படி பெறுவது?

இந்தத் திட்டத்தின் கீழ் ₹64 லட்சம் நிதியை எவ்வாறு பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் ₹11,550 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் உங்கள் டெபாசிட் ₹1,38,600 ஆக இருக்கும்.
15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், உங்களின் மொத்த வைப்புத் தொகை ₹ 20,79,000 ஆகும்.

இந்தத் தொகையின் 8.2% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது மொத்தத் தொகையாக ₹ 64,01,082 பெறுவீர்கள்.

இதில் ₹43,22,082 வட்டியாக கிடைக்கும்.

திட்டத்தின் விபரம்: 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

திட்டத்தின் வேறு அம்சங்கள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.

ஆண் குழந்தைகள் திட்டம்: இதற்கு இணையான ஒரு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக உள்ளது. அது National Savings Certificate (NSC) திட்டம். அதாவது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மூலம் 2 லட்சம் ரூபாய் வருவாய் எப்படி ஈட்டலாம் என்று பார்க்கலாம்.

இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமான திட்டமாகும், மேலும் இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது. ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம் உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

இது சிறந்த வருவாயை உருவாக்க நிலையான வருமானம் மற்றும் உத்தரவாதமான வருமானத் திட்டத்தை எளிதாக்குகிறது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+