வெறும் ரூ.700 இருந்தால் போதும்.. இனி ஜாலியாக விமானத்தில் பறக்கலாம்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். இன்னுமே கூட விமான சத்தம் கேட்டால் அனிச்சையாக நாம் மேலே வானத்தை நோக்கிப் பார்ப்போம். அந்தளவுக்கு விமானம் மீது நமக்குத் தீராத காதல் இருக்கிறது. ஆனால், கட்டணம் அதிகம் என்பதால் பலரும் விமானத்தில் பயணிப்பதில்லை. ஆனால், ரூ700க்கு குறைவான கட்டணத்தில் விமானத்தில் பறக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வரலாற்று ரீதியாகவும் விமானங்கள் தான் மனிதக்குல பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. விமானங்கள் வருவதற்கு முன்பு வரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு தொலை தூர இடத்திற்குச் செல்ல கப்பல் அல்லது ரயில்களைத் தான் பயன்படுத்த வேண்டும். இதற்குப் பல நாட்கள் ஆகும். ஆனால், பல நாட்கள் என்பதை விமானங்கள் சில நாட்களாகக் குறைத்தன.

bangalore flight offbeat

பாதுகாப்பானது: மேலும், விமானங்கள் தான் இப்போது இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக இருக்கிறது. இது பலருக்கும் ஷாக்காக இருக்கலாம். ஆனால், உண்மையில் விமானங்கள் தான் பாதுகாப்பானவை. விமானத்தில் 10 கோடி பேர் பயணிக்கிறார்கள் என்றால் அதில் 0.07 பேர் மட்டுமே உயிரிழக்கிறார்கள். அதேநேரம் ரயில்களில் இது 0.43ஆகவும் கார்களில் இது 7.28ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தளவுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதும் விமானங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

இந்தியாவில் விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால், கட்டணம் அதிகம் என்பதால் பலரும் விமானத்தைத் தேர்வு செய்வதில்லை. ஆனால், வெறும் ரூ.700க்கு உங்களால் விமானத்தில் பறக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம் உண்மை தான்.. அதுவும் தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு ஆப்பர் இருக்கிறது.

வெறும் ரூ.700 தான்: ரூ.700 என சொல்லிவிட்டு வரி, சர்- சார்ஜ் என அது இது எனப் போட்டுவிடுவார்கள் என நினைக்காதீர்கள்.. நீங்கள் மொத்தம் கட்ட வேண்டியதே ரூ.700.. கூடுதலாக ஒரு பைசா கூட கட்டாமல் விமானத்தில் பறக்கலாம். அது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

மத்திய அரசு இரண்டாம் கட்ட நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களை மேம்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். அதன்படி தான் சேலம் விமான நிலையத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா காலத்தில் சேலத்திற்கான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் அங்கு விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

எந்த ரூட்: சேலத்தில் இருந்து பெங்களூருக்கான விமான கட்டணம் தான் ரூ.700க்கு கீழ் இருக்கிறது. இந்த ரூட்டில் அலையன்ஸ் ஏர் தினசரி விமானத்தை இயக்கி வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் விமான கட்டணம் ரூ.700க்கு கீழ் தான் இருக்கிறது. உதாரணத்திற்குச் சேலம் டூ பெங்களூரில் அடுத்த மாதம் 16 நாட்கள் கட்டணம் ரூ.700க்கு கீழ் இருக்கிறது.

அடிப்படை கட்டணம் ரூ.700.. கூடுதல் சர் சார்ஜ் ரூ. 35 வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் ஆப்பர் ரூ.50 கிடைப்பதால் ரூ.700க்கு கீழ் அதாவது ரூ.685க்கு நம்மால் விமானத்தில் பறக்க முடிகிறது. அவ்வளவு ஏன் நாளை (ஜூலை 18ம் தேதி) கூட விமான கட்டணம் ரூ. 685 தான்.

எத்தனை மணிக்கு: இந்த விமானம் சேலத்தில் இருந்து மாலை 4.40 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.50 மணிக்குப் பெங்களூர் சென்றடைகிறது. உணவு எதுவும் இதில் வழங்கப்படாது. மேலும், 15 கிலோ வரை லக்கேஜ்ஜையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். மறு மார்கத்தில் பெங்களூரில் இருந்து மதியம் 12.20க்கு புறப்பட்டு சேலத்திற்கு 1.20 மணிக்கு இந்த விமானம் வந்தடைகிறது.

அதிலும் பெரும்பாலான நாட்கள் விமான கட்டணம் ரூ.700க்கு கீழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விமானத்தில் பறக்க ஆசைப்படுவோர் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+