ஓடிடியில் வெளியானது குத்தமா.. இந்தியன் தாத்தாவை கதறவிடும் இணையவாசிகள்.. அதுவும் எப்படி தெரியுமா?
சென்னை: நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் நேற்று இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியது. படம் வெளியான போது மிகப்பெரிய அளவில் ட்ரோல்களை சந்தித்த இந்தியன் 2, இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதால் மீண்டும் கடுமையான ட்ரோல்களை சந்தித்து வருகிறது. தாத்தா வாராறு கதற விடப்போறாறு என்று அனிரூத் பாடியது, அப்படியே உல்டாவாகி உள்ளது. இந்தியன் தாத்தாவைத்தான் நெட்டிசன்கள் கதறவிடுகிறார்கள்.
80களில் பிறந்தவர்களுக்கும் 90களில் பிறந்தவர்களுக்கும் இந்தியன் தாத்தா ஏற்படுத்திய தாக்கம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரியது. மிக சமானிய மக்கள் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களால் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று என்பது தான் கதை. மிக எளிமையான இந்த கதையில் மகளை லஞ்சம் வாங்குவோரால் பறிகொடுக்கும இந்தியன் தாத்தா, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை தேடி தேடி கொல்வார். கடைசியில் மகனையும் லஞ்சம் வாங்கியதற்காக கொல்வார். லஞ்சம் வாங்குவோர் யாராக இருந்தாலும் இந்தியன் தாத்தா கொல்வார் என்பதே கதையின் சாரம்சமாக இருக்கும்.

சுருக்கமாக இந்தியன் படத்தின் கதை என்பது, லஞ்சம் வாங்கியவர்களால் மகளை பறிகொடுக்கும் இந்தியன் தாத்தா, லஞ்சம் வாங்கியதற்காக மகனையும் பறிகொடுப்பதும் கதையாக முடியும். இந்த படத்தில் உள்ள காட்சிகள் எல்லாம் இன்றும் பலராலும் பாராட்டப்படுகிறது. இப்படி ஒரு படத்தை ஷங்கரே நினைத்தாலும் இன்னொரு முறை எடுக்க முடியாது என்றும், கமல்ஹாசனே மீண்டும் நடித்தாலும், அப்படியே வராது என்றும் கூறுவார்கள்.
இந்நிலையில் 2கே கிட்ஸின் காலமான இப்போது மீண்டும் இந்தியன் தாத்தா, இந்தியன் 2 வடிவில் வந்தார். ஷங்கர் எடுத்த படங்களிலேயே இந்த படம் தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஷங்கரை பொறுத்தவரை எளிமையான மக்களின் வலியை பிரம்மாண்ட கதை மூலம் காட்டுவார். அவர் எடுத்த எல்லா படங்களும் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். அவர் எடுத்த பாய்ஸ் படம் விமர்சனங்களை சந்தித்தாலும், இன்றைக்கு உள்ள 2 கே கிட்ஸ்க்கு பிடித்த படமாக இருக்கிறது.. மற்றபடி அவர் எடுத்த எந்த படமும் மோசம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஷங்கர் எடுத்த இந்தியன் 2 படம் மீது இந்தியன் படம் இருந்த பிரம்மாண்டம் காரணமாக அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய குறையாக இசை இருந்ததாக 2கே கிட்ஸ் நெட்டிசன்கள் தற்போது குற்றம்சாட்டுகிறார்கள்.. ஏஆர் ரகுமானுக்கு பதில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்ததையே ரசிகர்கள் சுத்தமாக ஏற்கவில்லை.. அங்கு ஆரம்பித்தது, படத்தில் கதையிலும் பல குறைகளை ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். இந்தியன் தாத்தா ஊழல் வாதிகளை கதறவிடுவார் என்று படம் பார்த்த ரசிகர்கள், இந்தியன் தாத்தாவையே கதறவிடும் அளவிற்கு விமர்சனங்களை வைக்க தொடங்கினார்கள்.
இந்தியன் 2 படம் படம் வெளியான முதல் வாரம் முழுவதுமே கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. அதன்பிறகு ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், மீண்டும் இந்தியன் 2 படத்தை விமர்சித்து வருகிறார்கள். தங்கள் பாணியில் படத்தை டிகோட் செய்து ஒவ்வொரு காட்சியாக விமர்சித்து வருகிறார்கள். வார இறுதிநாளான இப்போது இந்தியன் தாத்தா தான் பேசுபொருளாக மாறி உள்ளார். நாளை ஞாயிறு என்பதால், இந்தியன் தாத்தாவை வேறு பிரச்சனை வரும் வரை ரசிகர்கள் விடமாட்டார்கள் என்றே தெரிகிறது. அந்த அளவிற்கு உக்கிரமாக விமர்சித்து வருகிறார்கள்.

-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications