யாருமே விஜய் உடன் கூட்டணிக்கு வரல.. தவெகவுக்கு தோள் கொடுக்க வரும் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி?
சென்னை: விஜய் தலைமையிலான தவெக உடன் எந்தக் கட்சியும் கூட்டணியில் இணையாத சூழலில் புதுக்கட்சி தொடங்கி உள்ளார். ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளதால், அவர் தவெக உடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளாரா என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக இன்று அறிவித்துள்ளார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகளில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தனிக்கட்சி, தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தவர்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
யாருக்கு ஆதரவு?
எம்ஜிஆர் அண்ணா திமுக தேர்தலில் போட்டியிடாது. ஒத்த கருத்து உடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம். அதே நேரத்தில் இந்த கட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சுயேட்சையாக போட்டியிடுவார்கள் எனக் கூறியுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். புதிதாக கட்சி தொடங்கியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவாரா என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
தவெக
நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டிலேயே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார். இது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.
விஜய்யின் இந்தப் பேச்சு பல்வேறு கட்சிகளுக்கும் தரப்படும் ஆஃபராக பார்க்கப்பட்டது. ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் டிரம்ப் கார்டு பல கட்சிகளை அவரது கூட்டணியில் இணைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்தக் கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேரவில்லை. தற்போது தவெக தனித்து விடப்பட்டுள்ளது.
தவெக உடன் கூட்டணி?
இந்நிலையில் தான் பண்ருட்டி ராமச்சந்திரன், இந்த தேர்தலில் தவெக கூட்டணியில் இணைந்து, அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு எனக் கூறியும் விஜய் உடன் எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் சேராத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சேருவார் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு முதல் கட்சியாகவும், ஒரே ஒரு கட்சியாகவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அண்ணாதிமுக கட்சியும் விஜய்க்கு ஆதரவு அளிக்குமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications