234 தொகுதிகள்.. விஜயின் அதிரடி திட்டம்.. தமிழக வெற்றி கழகம் அவர்களோட கூட்டணி வைக்க போகுதா! சரவெடி
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான exclusive தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
சுவாரசிய தகவல்கள்; 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான exclusive தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி தேமுதிக பாணியில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் என்று தகவல்கள் வந்துள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர் , பாஜக என்று எல்லோரையும் எதிர்த்து தனியாக தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று தகவல்கள் வந்துள்ளன. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளையும் கூட எதிர்த்து தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கூட்டணி வைக்குமா என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைத்து போட்டியிடாது என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, பாஜக, திமுக மீது விமர்சனம்: நடிகர் விஜய் தான் தொடங்கியிருக்கும் கட்சியின் பெயரை அறிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் திமுக, அதிமுக, பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அதன்படி, நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன, திமுக, அதிமுக, பாஜகவை தாக்கும் விதமாக கூறியுள்ளார்.
அதோடு, ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்று அட்டாக் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications