ஓய்வூதியம் சரி.. இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறுங்க: திருமாவளவன் வைத்த கோரிக்கை
சென்னை: "சமவேலை - சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்" என தமிழக அரசை விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இந்தநிலையில் அவர்களில் 996 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசின் உத்தரவுகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலை - சம ஊதியம்" என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கைது செய்யப்பட்ட 996 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் ஆசிரியப் பெருமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்பதுடன், அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள அறிக்கையின் படி, ஆறாவது ஊதிய குழவில் நேர்ந்த ஊதிய முரண்களைக் களைந்து சம ஊதியம் வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். ஜனநாயகப் பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்
பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications