சீரியஸாவே இல்லையே விஜய்! அஸ்திவாரமே இல்லாம 2026 எப்படி! மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கும் சிக்கல்கள்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக திமுக சீரியசாக எடுத்துக் கொண்டு தேர்தல் வேலைகளை துவக்கி விட்டன. ஆனால் தமிழகத்தின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தேர்தலை கவனமாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட போதிலும் இன்னும் கிளைக் கழக நிர்வாகிகள் நியமனம் கூட முழுதாக நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது.
பெயருக்கு விருப்ப மனு பெறப்படுவதாக அறிவித்திருக்கும் நிலையில் விஜய்யின் பிரச்சாரமும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படி விஜய்க்கு பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் அவர் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி தமிழக அரசியல் களத்துக்கு புதிதல்ல. பல சமயங்களில் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தனித்தனி கூட்டணிகளை அமைத்தோ? தனித்தோ? களம் கண்டு பலமுனை போட்டிகளை உருவாக்கி இருக்கின்றன.

விஜய் அரசியல்
அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் நான்கு முனைகளில் நின்று 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கின்றன. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக தலைமையில் பெரும் கூட்டணி ஒன்று தேர்தல் களத்துக்கு தயாராக இருக்கிறது. அதனுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநில கட்சிகளான மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் துணை நிற்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
மறுபுறம் தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுகவில் தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சிகளான பாமக, ஐஜேகே,புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அந்த கட்சி நிச்சயம் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கும். மறுபுறம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என உறுதியாக சொல்லி இருக்கிறார். இதில் நான்காவதாக எண்ட்ரி கொடுத்தவர் தான் விஜய்.
2026 தேர்தல்
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் குதித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என கூறி விஜய் பல தேர்தல்களைக் கண்டு கொள்ளவில்லை. இதுவே விஜய் மீதான விமர்சனமாகவும் முன் வைக்கப்பட்டது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என இரண்டரை கோடி வாக்குகளை குறி வைத்து தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்கின்றனர் அந்த கட்சியினர். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கைகளும் அந்த கட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
விஜய் டிவிகே
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தான் முழுமையாக மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தயாரிக்கப்பட்டது. பின்னர் மாநகர், நகர், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்குள் கட்சியில் போட்டியிட விரும்பபவர்கள் விருப்பமான தாக்கல் செய்யலாம் என அறிவித்து விட்டார். ஆனால் ஒன்றிய நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்க முடியுமா? பூத் கமிட்டி வேண்டாமா என்ற கேள்விகள் எழுகிறது.
கிளைக் கழகம்
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் பனையூருக்கும் பட்டினப்பாக்கத்திற்கும் செல்வதுதான் சென்னையில் விஜயின் அரசியலாக இருக்கிறது. திருச்சியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை அரங்கேற்றினாலும் அது ஐந்தாறு மாவட்டங்களுடன் நின்று விட்டது. இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜய் செல்லவே இல்லை. இடையில் பிரம்மாண்டமாக மாநில மாநாடுகள் நடந்தது. அது விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை காட்டுகிறது.
பூத் கமிட்டி
ஆனால் விஜய் கட்சிகள் செய்யும் தவறுகளால் அந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உண்மையில் அதிமுக திமுக தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்ற காரணமே கிளைக் கழக நிர்வாகிகள் தான். ஒவ்வொரு கிளையிலும் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக அதிமுக கிளைகளில் இருக்கின்றனர்.
தவெக விருப்ப மனு
ஆனால் ஒன்றிய அளவிலான பணிகளையே தற்போது தான் தமிழக வெற்றிக் கழகம் முடித்து இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிளை கழகம் பூத் கமிட்டி ஏஜென்ட்களை எவ்வாறு நியமனம் செய்வார்கள் என்பது தெரியவில்லை. கிளைக் கழகங்கள் அமைக்கப்படாமல் பூத் கமிட்டிகள் எப்படி அமைக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஏதோ கடமைக்கு அறிவிக்கப்பட்டது போல் தான் இருக்கிறது.
அரசியல் விமர்சனம்
கட்சியில் விஜய், ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன் உள்ளிட்டவர்களை தவிர தமிழகம் முழுவதும் அறிந்த நபர்கள் இல்லை. தற்போது விஜய் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஒரு சிலரை மட்டுமே அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். 100ல் 65 சதவீதம் பேரை யாருக்குமே தெரியாது. இவர்களை வைத்து எப்படி விஜய் தேர்தலை சந்திக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தாமல் கோட்டைக்கு செல்வேன் என்ற விஜயின் பேச்சு அவருக்கு எதிராக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications