Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லம்போகினி காருக்கு தேங்காய் உடைத்த பெண்! உடனே நடந்த சம்பவம்.. 1 நொடி ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஆசை ஆசையாக வாங்கிய லம்போகினி காருக்கு முதல் முறையாக தேங்காய் உடைத்து அதன் பெண் உரிமையாளர் பூஜை செய்து இருக்கிறார். அப்போது தேங்காய் உடைக்கும் போது நடந்த விஷயம் அந்த பெண்ணை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.

கார் வாங்க வேண்டும் என்பது இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு உள்ள மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாக இருக்கும். இதுவே கொஞ்சம் வசதிபடைத்தவர்கள் ஆடம்பர சொகுசு கார்கள் மீது ஒரு கண் வைத்து இருப்பார்கள்.

Car Lamborghini car coconut

ஆடம்பர சொகுசு கார்கள்

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், லம்போகினி போன்ற ஆடம்பர சொகுசு கார்களை சாலையில் செல்வதை பார்த்தாலே ஒரு நொடி நின்று வாகன பிரியர்கள் கவனித்து செல்வார்கள். அந்த அளவிற்கு கார் பிரியர்கள் மனதில் சொகுசு கார்களுக்கு என்று தனி இடம் இருக்கும்.

ஆசை ஆசையாய் காரை வாங்கிவிட்டு அதை முதல் முறையாக டிரைவ் செய்யும் போது கனவு நனவாகிவிட்டது போல ஒரு திருப்தி ஏற்படும். சில நேரங்களில் இப்படி முதல் பயணம் செய்யும் போது ஒரு சிலருக்கு நடக்கக்கூடிய சில சுவாரசியமான மற்றும் ஷாக் கொடுக்கும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஆவதை பார்க்க முடிகிறது.

முதல் முறையாக பூஜை செய்து இருக்கிறார்

சமீபத்தில் காரை முதல் முறையாக ஷோரூமில் இருந்து வெளியே எடுத்த பெண் ஒருவர் அதை ஓட்ட தெரியாமல் ஓட்டி தலைகுப்புற கவிழ்த்த காட்சி வலைத்தளத்தில் வைரலானது. அதேபோன்ற ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. அதாவது, லம்போகினி கார் வாங்கிய பெண் ஒருவர் அதற்கு முதல் முறையாக பூஜை செய்து இருக்கிறார்.

பூஜை செய்து முடித்த பிறகு அருகில் இருந்தவர் தேங்காய் உடைக்க சொல்கிறார். அந்த பெண்ணும் தேங்காயை ஓங்கி தரையில் அடிக்கவும் தேங்காய் அப்படியே தெறித்து கார் மீது விழுந்து சிதறுகிறது. ஒரு நிமிடம் இதைப் பார்த்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார். கார் எந்த டேமேஜ்ஜும் ஆகாததை அடுத்தே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

நெட்டிசன்கள் கமெண்ட்

ரொம்பவே சின்ன விஷயம்தானே.. இதற்கு ஏன் இந்த பில்டப் என நீங்கள் நினைக்கலாம். சாதாரண விஷயமாகவே இருந்தாலும் நெட்டிசன்கள் இதை வைரல் ஆக்கி கடந்த இரண்டு நாட்களாக டிரெண்ட் செய்து விட்டார்கள். இதனால் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரல் செய்யப்பட்ட வீடியோவாக இது மாறிப்போனது. நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஹார்ட் அட்டாக்கே வந்துட்டு போயிருக்கும்

ஒரு நொடி ஹார்ட் அட்டாக்கே வந்துட்டு போயிருக்கும் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில் நல்ல வேளையாய் தேங்காய் தான் கார் மீது விழுந்தது. அதற்கு முன்பாக கற்பூரம் கொளுத்தினார்கள். அது ஏதாவது காரில் விழுந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் நினைத்து பாருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இணையத்தில் சுமார் 1 கோடி பார்வையாளர்களை நெருங்கி இந்த வீடியோ வைரல் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+