சென்னை அண்ணா நகரில் அதிர்ச்சி சம்பவம்.. மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி!
சென்னை: சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததால், கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளார்.
சென்னை பாடிபுதுநகரைச் சேர்ந்த கலாவதி என்பவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் எதனால் உயிரிழந்தார் என்பதில் இன்னும் உறுதியான தகவல் தெரியவரவில்லை. பள்ளத்திற்கு அடியில் மின் வயர்கள் செல்வதால், மின் கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அரசின் அலட்சியத்தால் தனது தாய் கலாவதி உயிரிழந்ததாக அவரது மகள் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பு நேர்ந்திருக்காது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
