"கணவரை விட 5 மடங்கு அதிகம் சம்பளம்.." விவாகரத்து பெறும் இளம்பெண்.. அப்போ ஜீவனாம்சம்?
சென்னை: விவகாரத்து பெறும் தம்பதிகளுக்கு ஜீவனாம்சம் குறித்தே பல்வேறு கேள்விகளும் இருக்கும். அப்படித் தான் கணவரை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்கும் பெண் ஒருவர் விவாகரத்து பெறுகிறாராம். அவர் ஜீவனாம்சம் குறித்து சமூக வலைத்தளத்தில் சில கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தக் காலத்தில் மனமுறிவு என்பது பரவலாக அதிகரித்துவிட்டது. கருத்து வேறுபாடுகள், கொடுமைப்படுத்துவது எனப் பல்வேறு காரணங்களால் விவாகரத்துகள் அதிகரித்து வருகிறது. விவாகரத்து என்பது இரு தரப்பிற்கும் மிகுந்த வலியைத் தரும் என்றாலும் கூட வேறு வழியில்லாமல் பலரும் மனமுறிவு முடிவுகளை எடுக்கிறார்கள்.

ஜீவனாம்சம்
பொதுவாக விவகாரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் தொடர்பான சந்தேகம் பலருக்கும் இருக்கும். பார்ட்னருக்கு எவ்வளவு ஜீவனாம்சம் தர வேண்டும்.. எப்படித் தர வேண்டும்.. எவ்வளவு காலம் தர வேண்டும் எனப் பல்வேறு சந்தேகம் இருக்கும். அப்படி இளம்பெண் ஒருவர் ஜீவனாம்சம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது அப்பெண்ணின் கணவர் அரசு வேலையில் இருக்கிறார். இருப்பினும், அவரை விட இந்தப் பெண் ஐந்து மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறாராம். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்த நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்க அந்தப் பெண் முடிவெடுத்துள்ளார். இப்போது கணவரை விட அதிகம் சம்பாதிப்பதால், அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டி இருக்குமா என்று இவர் கேட்டுள்ளார்.
இளம்பெண் கேள்வி
35 வயதான பெண் தனது ரெடிட் பக்கத்தில், "எனது திருமண வாழ்க்கை இப்போது மோசமான நிலையில் இருக்கிறது. நான் விவகாரத்து பெற முடிவு செய்திருக்கிறேன். எங்களுடையது காதல் திருமணம் தான். கல்யாணமாகி எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் ஒரு அட்டை போன்றவர்.. என்னிடம் பணம் கேட்காமல் பரஸ்பர விவாகரத்திற்கு எளிதில் சம்மதிக்க மாட்டார்.. எனவே மனரீதியான கொடுமைப்படுத்தினார் எனச் சொல்லி விவாகரத்து கேட்க வேண்டி இருக்கும் என நினைக்கிறேன்.
5 மடங்கு அதிகம்
எனது கணவர் அரசுத் துறையில் வேலை செய்து வருகிறார். அவர் இப்போது மாதத்திற்கு ₹1.2 லட்சம் சம்பாதிக்கிறார். ஐடி துறையில் வேலை செய்யும் நான் ஆண்டுக்கு ₹75 லட்சம் சம்பாதிக்கிறேன். எனது கணவர் இத்தனை நாட்களாக என்னை நிதி ரீதியாகவும், எமோஷனலாகவும் துன்புறுத்தி வந்தார். இருப்பினும், அவர் தனது பதவியையும் செல்வாக்கையும் எனக்கு எதிராகப் பயன்படுத்தி மேலும் பணம் பறிப்பார் எனப் பயமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறி தனியாக வசிக்கிறேன். வேறு ஒரு மாநிலத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பிக்க வாய்ப்பிருக்கிறதா.. அவர் போனில் என்னை ஆபாசமாகப் பேசும் ஆடியோவும் என்னிடம் இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
நெட்டிசன்கள் பதில்
அப்பெண்ணின் கேள்விக்கு நெட்டிசன்கள் பல்வேறு பதில்களைக் கொடுத்து வருகிறார். அதன்படி ஒருவர், "ஆம், உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை அவர் ஜீவனாம்சமாகக் கேட்கலாம்.. இருப்பினும், நீங்கள் இருவரும் அரசு குடியிருப்பில் வசித்துள்ளீர்கள். அங்கிருந்து நீங்கள் வெளியேறுவதால் ஜீவனாம்சம் கணிசமாகக் குறையும். அதேநேரம் அவர் போதுமான அளவு சம்பாதிப்பதாக நீதிபதி கருதினால் ஜீவனாம்சம் தர வேண்டி இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "5 மடங்கு அதிகம் சம்பாதிப்பதால் நீங்கள் நிச்சயமாக ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால அதுவே சரியாகவும் இருக்கும். உங்கள் வருமானத்தில் 20-30% ஜீவனாம்சம் செலுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். அதேநேரம் இன்னொரு நபர், "அவர் ஒரு அரசு ஊழியர். வாழ்நாள் முழுவதும் வேலை இருக்கும். நிதி ரீதியாக வாழ்க்கைத் துணையைச் சார்ந்து இருக்கத் தேவையில்லை. இதனால் நீதிபதி ஜீவனாம்சம் வேண்டாம் எனக் கருதலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் சட்டப்படி ஜீவனாம்சம் என்பது மனைவிக்கு மட்டும் உரித்தானது என்று எந்தவொரு சட்டமும் இல்லை. கணவர் மனைவியின் வருமானத்தைச் சார்ந்து இருக்கும் சூழல் இருந்தால் மனைவி ஜீவனாம்சம் தர வேண்டி இருக்கலாம். அதையே தான் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications