Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாரிசு..." படமாங்க இது! பெண் அடிமைத்தனத்தை தான் மறுபடியும் புகுத்துது! விளாசி தள்ளிய பெண்! பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு திரைப்படம் குறித்து பெண் ஒருவர் பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் வாரிசு படம் பெண் அடிமைத்தனத்தையே ஊக்குவிப்பதாகவும் இதுபோன்ற ஒரு படம் வரவே தேவையில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "வாரிசு.." இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த புதன்கிழமை உலகெங்கும் ரீலிசானது.

அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்துடன் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இரு ரசிகர்களுமே தங்கள் ஹிரோவின் படத்தைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

வாரிசு

வாரிசு

பட புரோமோஷன்களை ஆரம்பித்ததில் இருந்தே "வாரிசு" படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. சிம்பு பாடிய தீ தளபதி படலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம் என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் புதன்கிழமை வெளியானது.

 குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

வம்சி குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து படம் எடுப்பதில் வல்லவர். அவரது முந்தைய திரைப்படங்களிலும் அப்படியே இருந்துள்ளது. இந்தச் சூழலில் வாரிசு திரைப்படமும் குடும்ப உறவுகளையும் குடும்ப செண்டிமெண்ட்களையும் அடிப்படையாக வைத்து உருவானது. விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாடு முழுக்க குடும்பம் குடும்பமாகப் பலரும் வாரிசு திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் வாரிசு படம் குறித்த வீடியோ ஒன்று டிரெண்டிங்கில் உள்ளது.

 பரபர வீடியோ

பரபர வீடியோ

பொதுவாக எப்போதும் படத்தின் முதல் நாளன்று படத்தைப் பார்த்து வந்தவர்களிடம் படம் குறித்துக் கேட்பார்கள்.. அப்படி யூடியூப் சேனல் ஒன்று பெண் ஒருவரிடம் வாரிசு திரைப்படம் குறித்துக் கேட்டுள்ளனர். அதற்குத் தான் அந்தப் பெண் பொரிந்து தள்ளிவிட்டார். வாரிசு படம் பெண் அடிமைத்தனத்தையே ஊக்குவிப்பதாகவும் இதுபோன்ற ஒரு படம் வரவே தேவையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேமகாக பரவி வருகிறது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது

அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது

அந்த வீடியோவில் அந்த பெண் முதலில் அந்த படம் குறித்து விளையாட்டாகவே பேசத் தொடங்குகிறார்.. சிவாஜி எம்ஜிஆர் திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகளை இதைவிடச் சிறப்பாகக் கையாண்டு இருப்பார்கள். படத்தில் எதுவும் நன்றாக இல்லை என்று விளையாட்டாகச் சொல்கிறார்.. அதன் பிறகு சீரியசாக பேசத் தொடங்கும் அந்த பெண், "குடும்பம் முக்கியம் என்று சொல்ல வருவது ஓகே தான். ஆனால், அதற்காக குடும்பங்களில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 பொறுத்துக் கொள்ள முடியாது

பொறுத்துக் கொள்ள முடியாது

திரும்பத் திரும்ப பெண்கள் அனைத்தையும் பொருத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் படம் மார்டனாக சொல்கிறது. மற்ற அனைத்தையும் விட அது ரொம்பவே மோசம்.. கணவர் மற்ற பெண்களுடன் இருந்தாலும் சரி... கண்டுகொள்ளாமல் இருந்தாலும் சரி.. குடும்பத்தைக் காக்கவும் பிள்ளைகளுக்காகவும் பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற 50 ஆண்டு பழைய கருத்தைத்தான் இவர்கள் மார்டனாக சொல்லியுள்ளனர். இது ரொம்பவே மோசமான ஒன்று

 குடும்பத்தில் ஜனநாயகம் தேவை

குடும்பத்தில் ஜனநாயகம் தேவை

சமூகம் மாறி வரும் நிலையில், மீண்டும் பெண்கள் என்றால் அனைத்தையும் பொருத்துக் கொண்டு வீட்டிலேயே இருங்கள் என்று சொல்வது ரொம்ப ரொம்ப மோசம்.. எனவே, இது மாதிரியான படங்கள் வரக் கூடாது. குடும்பம் என்பது ஜனநாயகமாக ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், அது குறித்து எந்த படங்களும் பேசுவதே இல்லை.. திரும்ப திரும்ப பெண்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். இதைச் சொல்ல இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் போன்ற ஒரு பெரிய நடிகர் தேவையில்லை" என்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+