65 வயது ராதா.. எண்ணெய் மசாஜ் செய்ய வந்த சவுமியா.. மசாஜ் முடிந்து வந்து பார்த்தா!
மசாஜ் செய்ய வந்த நர்ஸ், வீட்டில் இருந்த நகைகளுடன் தப்பி ஓடிவிட்டார்
சென்னை: தொழிலதிபர் மனைவி ராதாவுக்கு சிகிச்சை அளிப்பது போல வீட்டுக்கு வந்த நர்ஸ் சவுமியா, 7 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஆட்டைய போட்டுவிட்டு மாயமாகிவிட்டார்!
தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ராதா. 65 வயதாகும் இவருக்கு கொஞ்ச நாளாகவே மூட்டு வலி உள்ளது.

அதனால் டாக்டரை போய் பார்த்ததில், 10 நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, ஒரு ஏஜென்சி மூலம் சவுமியா என்ற நர்ஸை வீட்டுக்கு சிகிச்சைக்காக வரவழைத்துள்ளனர்.
27 வயதான சவுமியா, ஒரு வாரமாக ராதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்திமுனம், ராதாவிடம் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதனால் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைக்குமாறு ராதா சொல்லி உள்ளார்.
பிறகு உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும், ராதா குளிக்க சென்றுவிட்டார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்தால் நர்ஸ் காணோம், பீரோவை திறந்து பார்த்தால் நகையும் காணோம். அவற்றின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உடனடியாக தேனாம்பேட்டை போலீசாருக்கு புகார் தந்தனர். விரைந்து வந்த போலீசாரும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், நர்ஸ் வீட்டை விட்டு வேகவேகமாக டென்ஷனாக செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நர்ஸ் யார், என்ன விவரம் சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் நடத்தப்பட்டு வருகிறது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications