பிக்பாஸ் சீசன் 5: பிரபல பெண் தொழிலதிபர் பங்கேற்கிறாரா?.. கசிந்த தகவல் உண்மையா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 5-இல் பெண் தொழிலதிபர் ஒருவர் போட்டியாளராக கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என சொல்லப்பட்டாலும் இதை பெரும்பாலானோர் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
அதிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் பேசும் அரசியலையும் பிக்பாஸ் போட்டியாளர்களை கண்டிப்பதையும் ரசிகர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு ரசிப்பர்.

அக்டோபர் 3 இல் தொடக்கம்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிக்பாஸ் சீசனில் லோகோவும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி வருகிறார்.

இவர்களா
இந்த முறை குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா, அவரது வளர்ப்பு மகள் மிலா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. அது போல் ஜிபி முத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, இமான் அண்ணாச்சி, சன் டிவி தொகுப்பாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு போட்டியாளரின் பெயர் கசிந்துள்ளது. அவர் தொழிலதிபர் ரேணுகா பிரவீன் என சொல்லப்படுகிறது. இவர் பியூட்டி சலூன் நடத்தி வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் சலூன் நடத்தி வருகிறார். சமந்தா, குஷ்பு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இவரிடம் சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

ஜீ தமிழ்
மேற்கண்ட போட்டியாளர்களின் பட்டியல் ஏதோ கசிந்த தகவல் தானே தவிர உறுதி செய்யப்பட்டவை அல்ல. ஜீ தமிழ் தொலைகாட்சியில் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. இதற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு போட்டி போடும் விதமாக பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளர்களின் தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications