சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி தற்கொலை.. விடுதி அறைக்குள் சடலம் கண்டெடுப்பு
சென்னை: மெட்ராஸ் ஐஐடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஐஐடியில் இறுதியாண்டு கப்பல் கட்டுமான துறையில் கல்வி பயின்று கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த சாகுல் கோர்னாத் என்ற 23 வயது மாணவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற 25 வயது ஆராய்ச்சி மாணவி ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உலோகவியல் (metallurgy) துறையில் பிஹெச்டி பயின்று வந்தவர் ரஞ்சனா குமாரி. 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அவர் சேர்ந்துள்ளார். கடந்த இரு தினங்களாக ரஞ்சனா குமாரியின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் போனை எடுக்காத காரணத்தினால் அவர்கள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் அறைக்கதவை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சனா குமாரி சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக 2016 ஆம் ஆண்டு, கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர், ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதே நாளில் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்த பேராசிரியர் மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து மர்மமான முறையில் நடைபெறும், தற்கொலை சம்பவங்கள், சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications