மெரினா கடற்கரையில் தலையில்லாமல் பெண் உடல்.. ஜெயலலிதா சமாதிக்கு பின்புறம் அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பின்புறம் கல்குட்டை என்ற பகுதி இருக்கிறது. இங்கு இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. அந்த பெண் உடல் தலையில்லாமல் கடலில் வீசப்பட்டிருந்தது. இதுபற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையை பொறுத்தவரை 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும்வந்து செல்கிறார்கள். இதில் அண்ணா சதுக்கம் பகுதியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கள் உள்ளன. நினைவிடங்களாக உள்ள இந்த இடத்திற்கு பலரும் வந்து செல்வார்கள். இது அரசியல் அடையாளமாக மட்டுமின்றி உலகின் மிக பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது. அதேநேரம் அண்ணா சதுக்கம் பகுதி கடற்கரையின் பின்பக்கம் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பின்புறம் உள்ள பகுதிக்கு கல்குட்டை என்று பெயர். இங்கு நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் கைப்பற்றி உடலில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. 2 கால்களின் பாதம் பகுதியும், துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. சுடிதார் அணியப்பட்டிருந்தது. ஆனால் அரைநிர்வாண கோலத்தில் உள்ளாடை மட்டுமே இருந்தது. தலை துண்டிக்கப்பட்டதால் அந்த பெண்ணின் வயதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
தலையையும், கால்களையும் துண்டித்து அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து, யாரோ மர்ம நபர்கள் கடலில் வீசியிருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். மீட்கப்பட்ட பெண்ணின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவிலேயே அந்த பெண்ணின் வயது மற்றும் உயிரிழந்த விதம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் காணாமல்போன பெண்களின் பட்டியலை சேகரித்து, அதன்மூலம் உயிரிழந்த பெண் யார்? என்ற விவரங்களை சேகரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் காணாமல் போன தலை கிடைத்தால் தான் இவர் யார் என்பதும் முழு விவரமும் தெரியவரும்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications