அண்ணாமலை தலைமையில் இருக்கும் போதே.. 3 பெண்கள் பாதிக்கப்பட்டாங்க.. மன்னிப்பு கேளுங்க! பாய்ந்த காயத்ரி
சென்னை: பாஜகவில் அண்ணாமலை வந்த பின் ஏகப்பட்ட விஷயங்கள் கைமீறி போய்விட்டது, அண்ணாமலை வந்த பிறகு ஆடியோ, வீடியோ பிரச்சனை எழுந்தது.. இவர் தலைமைக்கு கீழ் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திருச்சி சூர்யா கொச்சையாக பேசியதற்கும், அண்ணாமலை பேசியதற்கும் வித்தியாசம் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கடுமையான புகார்களை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம் வைத்து இருக்கிறார். காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார்.
இதனால் காயத்ரிக்கும் அண்ணாமலைக்கும் இடையில் நேரடியாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்தும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.

அண்ணாமலை
கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். மேலும் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான பர்சனல் அட்டாக் மேற்கொள்ளப்படுகிறது. வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடக்கிறது. தமிழ்நாடு போலீஸ் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் வைக்கிறார்கள், என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு உள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தமிழ்மின்ட் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு, தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என் கட்சிக்காரர்களே என்னை, பெண்களை தவறாக பேசுவது மன வருத்தத்தை தருகிறது. சொந்த கட்சியிலேயே தொந்தரவு வரும் போது எங்கே செல்ல முடியும். வார் ரூம் வைத்து பெண்களை சீண்டுகிறார்கள். அதனால் போலீசிடம்தான் கோரிக்கை வைக்க முடியும். என்னை குறி வைத்து தாக்குகிறார்கள். என்னை நீக்கிய மறுநாளே அந்த பொறுப்பிற்கு வேறு ஒருவரை போடுகிறார்கள். ஆனால் திருச்சி சூர்யாவை நீக்கியவர், அங்கு வேறு ஒருவரை போஸ்டிங்கில் போடவில்லை. நான் திரும்பி வரவே கூடாது என்றுதான் இப்படி செய்கின்றனர்.

திருச்சி சூர்யா
அண்ணாமலைக்கு வார் ரூம் இருப்பதை திருச்சி சூர்யா ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு தலைவருக்கும் சொந்த செலவில் வார் ரூம் இருக்கும். பாஜகவின் வார் ரூம் இங்கே தனி நபர் வார் ரூமாக இருக்கிறது. அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி மீது நிதி மோசடி புகார்கள் வைக்கப்படுகின்றன. தொடர்ந்து புகார்கள் வைக்கப்படுகின்றன. இதை போலீஸ் விசாரிக்க வேண்டும். இவை போன்ற விஷயங்களும்தான் கட்சிக்கு களங்கத்தை விளைவிக்கும். இவை எல்லாம் பாஜகவை பார்த்து சிரிக்க வைக்கும் விஷயங்களாக மாறிவிட்டன. என்னை கட்சியில் ஒரு பலியாடு ஆக்கிவிட்டனர். என்னை சஸ்பெண்ட் செய்த பின் பல குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

வார் ரூம்
அவர் போலீசாக இருந்தவர் தானே? ஒருவர் மீது புகார் வைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் இல்லையா? அதைத்தான் அவர் செய்கிறார். நான் ட்விட்டரில் எழுதினேன், திமுகவின் ஸ்லீப்பர் செல், துபாய் ஹோட்டலுக்கு போனேன் என்றெல்லாம் பொய்யாக பேசி வருகிறார்கள். என்னிடமும் சில உண்மைகள் இருக்கிறது. என்னிடமும் ஆதாரங்கள் இருக்கின்றன. என்னிடம் ஆதரவாக பலர் போனில் பேசி வருகிறார்கள். அது யார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது துபாய் விஷயம் நடக்கும் போது எனக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை. திருச்சி சூர்யா ஒரு பேட்டியில், அண்ணாமலையை பிஎல் சந்தோஷின் வளர்ப்பு மகன் என்று சொல்லி இருந்தார்.

திமுகவின் ஸ்லீப்பர் செல்
இதுவும் ஒரு வாரிசு அரசியல்தான். பிஎல் சந்தோஷ் பெயரை வைத்து இவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள். அவர் பெரிய பவர் புல் மனிதர். அவரால்தான் அண்ணாமலை வளர்ந்து இருக்கிறார். ஆனால் அவர் பெயரை பயன்படுத்தி எங்களை மிரட்டி வருகிறார்கள். அண்ணாமலை இது ஒரு தேசிய கட்சி என்பதை மறந்துவிட்டார். தேசிய கட்சி கூட்டத்தில் 150 பேருக்கு முன் என்னை கொச்சையாக பேசி உள்ளார். இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. இனியும் இப்படி நடக்க கூடாது. இவர் வந்த பின் ஏகப்பட்ட விஷயங்கள் கைமீறி போய்கிட்டு இருக்கு. இவர் வந்த அப்பறம் ஆடியோ, வீடியோ பிரச்சனை எழுந்தது. இவர் தலைமைக்கு கீழ் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திருச்சி சூர்யா கொச்சையாக பேசியதற்கும், அண்ணாமலை பேசியதற்கும் வேறுபாடு இல்லை. இருவரும் கொச்சையாக பேசி இருக்கிறார்கள்.

பிஎல் சந்தோஷ்
இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பற்றி தவறாக பேசினால் நாக்கை வெட்டுவேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் அவர் மோசமாக பேசி இருக்கிறார். அண்ணாமலை அவர் மனைவியை வெளியே காட்டி இருக்கிறாரா? வெளியே பொதுவெளியில் கொண்டு வந்து இருக்கிறாரா? அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறாரே.. நாங்களும் பெண்கள் தானே? சொந்த கட்சியில் இருக்கும் பெண்களை மட்டும் அவர் அவமதிக்கிறாரே? அவர்களை மட்டும் விட்டுக்கொடுத்து பேசுகிறாரே.. என்று காயத்ரி ரகுராம் பேட்டியில் கூறியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications