மகளிர் உரிமை தொகை.. ரூ.1000 அனுப்புவது இருக்கட்டும்.. வங்கிகளில் சத்தமே இன்றி நடந்த புரட்சி.. செம
சென்னை: கலைஞர் மகள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹1,000 உரிமைத்தொகை பெறக்கூடிய பெண்களில் பலர் அதை வங்கிகளில் சேமிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 10 லட்சம் பயனாளிகளில் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் அதிகமானோர், முழு தொகை அல்லது பாதி தொகையை வங்கிகளில் சேமிக்கிறார்களாம்.
பெண்கள் உரிமைத்தொகையை பலர் வங்கிகளில் சேமிக்க காரணம் அதற்கு கிடைக்கும் ரிட்டர்ன்தான் என்கிறார்கள். அதன்படி சிலர் 8% சதவீத வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளில் RD மூலம் சேமிப்பதாக தகவல்கள் வருகின்றன.

ரிட்டர்ன்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தை வைத்து நீங்கள் கூடுதல் லாபம் பெற முடியும். அதை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
இந்த 1000 ரூபாய் உங்களுக்கு குட்டி போட போகிறது.. ஆம் குறிப்பிட்ட வங்கியில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.
பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் சேர்க்க முடியும். தமிழ்நாடு அரசு இதற்காக மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நீலகிரியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதில் இணைந்தால் மகளிர் உரிமைத்தொகை பணத்திற்கு மட்டும் 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். சாதாரணமாக வழங்கப்படும் 3-4 சதவிகிதம் வட்டிக்கு பதிலாக இந்த கூடுதல் வட்டி இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் அளிக்கும் நீலகிரி கூட்டுறவு வங்கி வழங்குகிறது.
திட்ட விரிவாக்கம்; கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது .
கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக்கம்: இதை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் கண்டிப்பாக இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர். 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.












Click it and Unblock the Notifications