திருமண உதவித்தொகை உயர்கிறது.. ஒரேடியாக உயரும் 5000 ரூபாய்.. தமிழக அரசு அதிரடி.. பெண்களுக்கு செம குஷி
சென்னை: பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு குட்நியூஸ் ஒன்றை தற்போது தெரிவித்திருக்கிறது.. இது தொடர்பான நம்பிக்கை அறிவிப்பை, திமுக அமைச்சர் சிவி கணேசனும் கூறியிருக்கிறார்.. அது என்ன தெரியுமா?
தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக தமிழக அரசு எத்தனையோ நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.. பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவும், அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக எத்தனையோ, பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

புதுமைப்பெண்: குறிப்பாக, புதுமைப்பெண் திட்டத்தில், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள்..
அதேபோல, பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. இந்த திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது.. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆண்கள்: தகுதியுள்ள அனைவருக்குமே 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும்நிலையில், ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க, திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.
இவைகளில், தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காகவே செயல்படுத்தப்படும் திட்டங்களில், 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும், அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என்ற இந்த 5 வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள், பெண்களிடம் மகத்தான வெற்றியையும் பெற்று வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தமிழக அமைச்சர் கணேசன் குட்நியூஸ் ஒன்றை சொல்லியிருக்கிறார்.. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 80வது கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து அமைச்சர் கணேசன் பேசும்போது, "சென்னை, மாமல்லபுரம், குற்றாலம், வால்பாறை பகுதிகளில் உள்ள ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.. விரைவில் அவை திறக்கப்படும்.
அமைச்சர் அதிரடி: தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட பயன்களை அதிக தொழிலாளர்கள் பெறுவதற்காக, தற்போதுள்ள ஊதிய உச்சவரம்பு, 25,000த்தில் இருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. வாரியம் வழியே, 30,134 தொழிலாளர்களுக்கு, 12.54 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.
திருமண உதவித் தொகை, கடந்த வருடம் ஏப்ரல் 1 முதல், 10,000 ரூபாயில் இருந்து, 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.. இந்த தொகையானது விரைவில் 25,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications