விஜய்யின் வெற்றிப் பயண திட்டம்! சென்னை டூ கன்னியாகுமரி வரை! பெண்கள் இலவசமாக செல்லலாமே! முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய், சென்னை கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்த வெற்றி பயண திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண்கள் இலவசமாகவே பயணம் செல்லலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த வெற்றி பயணம் திட்டத்தின் மூலம் பெண்கள் எவ்வளவு தூரத்திற்கு இலவசமாக பயணிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். அதாவது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்கிறார்கள்.

vetri payanam scheme

அரசு போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூர சொகுசு பேருந்துகள், குளிர் சாதன பேருந்துகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தவிர்த்து மற்ற பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்தான்.

அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 30 முதல் 100 கி.மீ. தூரமும், எல்எஸ்எஸ் பேருந்துகள் 30 முதல் 40 கி.மீ. தூரமும், டீலக்ஸ் பேருந்துகள் 30 முதல் 50 கி.மீ. தூரம் வரையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதை வைத்து சென்னையில் இருந்து ஒருவர் எக்ஸ்பிரஸ் பேருந்தில் பயணித்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி என பேருந்துகள் மாறி மாறி கட்டணம் இல்லாமல் நீண்ட தூரம் செல்லலாம் என்கிறார்கள்.

மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி வெற்றிப் பயணம் என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை அவரே வழங்கினார். பின்னர் அங்கிருந்த பெண்கள், விஜய்க்கு சாக்லேட் கொடுத்தனர். அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

வெற்றி பயண திட்டம் மூலம் முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர், மலை பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் மாநகர, நகர்ப்பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்த சேவையில் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம். இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ 6000 கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69%), மொத்தம் 1,94,649 நடைகளில் , 1,65,312 நடைகள் (85%) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்திற்கு முதல்வர் விஜய் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அங்கு தயாராக இருந்த இரு பேருந்துகளுக்குள் முதல்வர் விஜய் சென்றார். அங்கு ஓட்டுநர், நடத்துநர்களிடம் நலம் விசாரித்துவிட்டு நடத்துநரிடம் இருந்த டிக்கெட் கொடுக்கும் கருவியை வாங்கி ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று பெண்களுக்கு பூஜ்ஜியம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கும் டிக்கெட்டை கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+