“இதயம் முரளியே” ஓகே.. மடக்கிய கோபிநாத்! “அர்ஜுன் ரெட்டி” கேட்டு நீயா நானாவில் மனம் மாறிய இளம்பெண்
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அர்ஜுன் ரெட்டி போன்ற ஆண் வேண்டும் என்று பேசிய பெண்ணிடம் கோபிநாத் முதல்வன் அர்ஜுன்போல் குறுக்கு கேள்வி கேட்டு இதயம் முரளியே ஓகே என்று அவரை ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.

நீயா நாயா
இதில் குறிப்பாக கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

காலத்துக்கு ஏற்ற தலைப்பு
குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என பல்வேறு தலைப்புகளை கையில் எடுத்து காலத்துக்கு ஏற்ப நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் விவாதத்தை நடத்தி வருகிறார்.

தமிழா தமிழா
நீயா நானாவை போன்றே ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழா தமிழாவில் ரக்கட் பாய்ஸ் vs சாக்லேட் பாய்ஸ் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ரக்கட் பாய்ஸ்
இதில் ராக்கட் பாய்ஸ் பிடிக்கும் என்று பேசிய பெண்களில் பலர் ஆண்களை உருவ கேலி செய்ததாகவும், தாடி வளராததை வைத்து விமர்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. கரு.பழனியப்பனும் பெண்களின் சார்பாகவே பேசியதாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதயம் முரளி விவாதம்
இதற்கு பதிலடி தரும் வகையில் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியின் ஒரு சிறுபகுதியை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இதயம் முரளி பாய்ஸ் VS கலாய்க்கும் பெண்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில், "அர்ஜுன் ரெட்டி ஆண்களை பிடிக்கிறது. ஏன் இதயம் முரளி ஆண்களின்மீது அவ்வளவு அபிப்ராயம் இல்லை?" என்று கோபிநாத் கேள்வி எழுப்பினார்.

பெண் பேச்சு
அதற்கு ஒரு பெண் "அர்ஜுன் ரெட்டி. தங்களுக்குள் ஒருக்கும் காதலை குட்டி குட்டி செய்கைகள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். இதயம் முரளி போன்ற ஆண்கள் அதை வெளிப்படுத்த பயந்துகொண்டு உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள். அர்ஜுன் ரெட்டி வகையறா ஆண்டுகள் ரொம்ப முரட்டத்தனமானவர்களாக இருக்கிறார்கள்." என்றார்.

கோபிநாத் கேள்வி
உடனே கோபிநாத், உங்களுக்கு மரியாதை கொடுப்பவர் வேண்டுமா? இல்லை அதிகாரம் செய்பவர் வேண்டுமா? என்று கேட்கிறார். அந்த பெண் மரியாதை கொடுப்பவர் என்று பதிலளித்தார். அதிகாரம் செய்பவன் ஆண் மகனா இல்லை மரியாதை கொடுப்பவன் நவீன ஆண் மகனா என்று கோபிநாத் கேட்க அந்த பெண் மரியாதை கொடுப்பவர் என்றே மீண்டும் பதிலளித்தார்.

இதயம் முரளி வேண்டும்
அப்போது உங்களுக்கு இதயம் முரளி வேண்டுமா? அர்ஜுன் ரெட்டி வகையறா வேண்டுமா? என்று கோபிநாத் கேட்க, அந்த பெண் சில நொடிகள் யோசித்துவிட்டு இதயம் முரளி என்று கூறி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்கிறார். இதனை கேட்டது எதிரே அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் கைதட்டுகிறார்கள். இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications