சுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு!

சென்னையில் பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுமித்ராவின் உடம்பெல்லாம் பாம்பு விஷம் ஏறிவிட்டது.. நரம்பு மண்டலம் மொத்தம் விஷம் பரவிவிட்டதால், அவரை காப்பாற்ற முடியவில்லை.

சென்னை கேகே நகரை சேர்ந்த தம்பதி பழனி - சுமித்ரா. பழனி சினிமா தயாரிப்பு ஒன்றில் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். சுமித்ராவுக்கு 35 வயதாகிறது.

போன ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்து வருகிறது. இதனால் சுமித்ராவின் வீடுமுழுவதும் சகதியாக இருந்துள்ளது.. அதனால் நேற்று முன்தினம் சுமித்ரா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

2 அடி நீளம்

2 அடி நீளம்

அப்போது வீட்டின் பாத்ரூம் அருகே இருந்த ஷூவினை எடுத்து வைக்க முயன்றார். அப்போது அந்த ஷூவுக்குள் 2 அடி நீளத்துக்கு ஒரு கட்டுவீரியன் பாம்பு உள்ளே பதுங்கி இருந்துள்ளது. ஆனால் அதை சுமித்ரா கவனிக்காமல், ஷூவை தூக்கியதுமே அந்த விஷ பாம்பு கடித்துவிட்டது.

வலியால் கத்தினார்

வலியால் கத்தினார்

இதனால் வலியால் சுமித்ரா அலறினார்.. இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுமித்ராவை மீட்டு கொண்டு போய் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சுமித்ரா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

சிகிச்சை

சிகிச்சை

சுமித்ராவுக்கு பாம்பு கடித்தபோதே உடம்பெல்லாம் விஷம் ஏறிவிட்டுள்ளது. அதனால், அவரது நரம்பு மண்டலம் மொத்தமும் விஷம் ஏறியதால்தான், சுமித்ராவுக்கு டாக்டர்கள் தந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்கிறார்கள். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்தம் 20 நிமிடங்கள் கடந்தும் உறையாமல் இருந்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். தீவிரமான சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில்தான், சுமித்ராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில்தான் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேகே நகர்

கேகே நகர்

இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடிக்கு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்து இல்லாததே பெண் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இளம்பெண் உடம்பெல்லாம் விஷம் பரவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+