அடங்காத ஆசை.. ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டருக்கு.. 9-ம் தேதி வரை ஜெயில்
மதுரையில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: மதுரையில் வாகன சோதனை என்ற பெயரில் டெய்லர் ஒருவரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி கைது செய்யப்பட்டார்... இதையடுத்து, வசந்தியை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத்.. இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். வில்லாபுரத்தில் ஒரு பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.. தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டுள்ளார்..
அதற்காக உறவினர்களிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.. ஆனால் அந்த பணம் போதாது என்பதால், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் வாங்குவதற்காக கடந்த 5-ம் தேதி நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.. அர்ஷத் கடனுதவி கேட்டதும், வீட்டில் போய் பணத்தை எடுத்து வருவதாக சொன்ன பாண்டி அங்கேயே இருக்க சொல்லிவிட்டு போனார்.

பெண் போலீஸ்
அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெக்டர் வசந்தி அங்கு வந்துள்ளார்.. விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றிருக்கிறார்.. கொஞ்ச தூரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை வசந்தி பறித்துக்கொண்டு, அர்ஷத்தை இறக்கிவிட்டாராம்.. இதனால் அதிர்ரச்சி அடைந்த அர்ஷத், தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டதற்கு, கஞ்சா கேஸில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டி அனுப்பி உள்ளார்..

அர்ஷத்
இதற்கு பிறகுதான், வேறு வழியில்லாமல் மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்திருக்கிறார்... கடந்த மாதம் 27ம் தேதி இந்த புகார் தரப்பட்டுள்ளது.. இதையடுத்து எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் போலீசார் விசாரணையில் குதித்தனர்.. இதற்காகவே தனி டீம் களமிறக்கப்பட்டது.. ஆனால், விஷயத்தை கேள்விப்பட்ட வசந்தி அதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டார்.. வழக்கில் உண்மை இருப்பது தெரிய வந்ததால் இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கைது
இறுதியில், இந்த வழக்கில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.. அவரிடமிருந்து 61 ஆயிரம் ரூபாயை பறிமுதலும் செய்தனர்... அதேபோல, உக்கிர பாண்டியிடமிருந்து ரூ.1,20,000, மற்றும் சீமைச் சாமியிடமிருந்து 45,000 பணத்தையும் கைப்பற்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அபகரிப்பு
அதாவது, மொத்தம் இதுவரை ரூ2,26,000 பணம் கைப்பற்றப்பட்டுவிட்டது.. மிச்சப் பணம் வசந்தியிடம் உள்ள நிலையில், அவரை தேடும் பணி ஆரம்பமானது.. தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு, தலைமறைவாக இருந்த வசந்தி சிக்கி உள்ளார்.. தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வசந்தியை கைது செய்துள்ளனர்... இத்தனை நாளும் கோத்தரிகியில் தலைமறைவாக பதுங்கி வந்துள்ளார்.. கோத்தகிரியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வசந்தியை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.. அவரை வரும் 9-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து வசந்தியிடம் விசாரணை ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

யார் இந்த வசந்தி?
யார் இந்த வசந்தி? வசந்தி ஆரம்பத்தில் நன்றாகத்தான் வேலை பார்த்துள்ளார்.. ஆனால் நாள் ஆக ஆக பணத்தின் மீது நாட்டம் அதிகரித்துள்ளது.. இதனால் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.. குறிப்பாக அப்பாவிகள் யாராவது பணம் கொண்டு போனால், விசாரணை என்ற பெயரில் அவர்களை மடக்கி பணத்தை பறித்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் துணிந்து ஸ்டேஷன் வரை வந்து புகார் சொல்ல மாட்டார்கள் என்று வசந்தி பலமாக நம்பியதுதான்...

திருட்டு
அதற்கேற்றபடி யாரும் வசந்தி மீது புகார் தராமல் ஒதுங்கி போயுள்ளனர்.. இது வசந்திக்கு சாதகமாகிவிட்டது.. அத்துடன் கூடுதல் நம்பிக்கையையும் தந்தது. வசந்திக்கு இந்த திருட்டில் கார்த்திக், பாண்டி என்பவர்கள் உதவியாக இருந்துள்ளனர்.. அர்ஷத் பண உதவி கேட்டது இந்த பாண்டி என்பவரிடம்தான்.

பாண்டி
அர்ஷத் 10 லட்ச ரூபாயுடன் தன்னை பார்க்க வருகிறார் என்று வசந்திக்கு தகவல் சொன்னதே பாண்டிதானாம்.. அதனால்தான் வசந்தி, விசாரணை என்ற பெயரில் அர்ஷத்தை மிரட்டி பணம் பறித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அர்ஷத் நிஜமாகவே பாண்டியிடம் கடன் வாங்க வரவில்லையாம்.. தன்னிடமுள்ள பணத்தை டப்ளிங் அதாவது இரட்டிப்பாக்கி தருவதாக பாண்டி சொன்னதால், பேராசையால் கிளம்பி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. "டப்ளிங்" செய்வது குற்றம் என்பதால் இந்த விஷயத்தை அர்ஷத் வெளியே சொல்ல மாட்டார் என்று வசந்தி பொய்க்கணக்கு போட்டுள்ளார்.

மிரட்டல்
"என் பணத்தை தயவுசெய்து குடுத்துடுங்க" என்று அர்ஷத் கெஞ்சியும் பணத்தை தரவில்லையாம் வசந்தி.. பணமா? எங்கே இருந்தது? என் பிள்ளை சத்தியமா உன்கிட்ட இருந்த பையில் ஸ்கூல் நோட்டு புக்தான் இருந்தது... பணமே இல்லையே.. இப்படியே நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன் என்று மிரட்டவும்தான், மாவட்ட எஸ்பி வரை சென்றுள்ளார் அர்ஷத்.

விசாரணை
இப்போது விசாரணையின் பிடியில் வசந்தி உள்ளார்.. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்களாம்.. எத்தனை பேரை இதுவரை எவ்வளவு பணம் பறித்துள்ளார்? வசந்தியின் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? என்ற விவரமெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்... இப்படித்தான், மதுரை செக்கானூரணி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்த அனிதா என்பவர் சிக்கினார்.. வசந்தியை விட கொஞ்சம் ஆபத்தானவர் அனிதா.

வழக்கு
யாராவது ஏதாவது புகார் தந்தால், புகார் தருபவரிடமே பணத்தை பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது, பிறகு, அவர்களிடமும் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது, கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களை பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவிடுவது இப்படி ஏகப்பட்ட குற்றங்களை செய்திருந்தார்.. கடைசியில் இவரை கடந்த நவம்பர் மாதம் லஞ்சம் பெற்ற வழக்கில், போலீசார் கைது செய்தனர்..

அனிதா
அன்று அனிதா, இன்று வசந்தி என பெண் போலீஸ்களின் அட்டகாசங்கள் எல்லைமீறி கொண்டிருக்கின்றன.. ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் இது போன்றவர்களால்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.. இதற்கெல்லாம் முக்கிய காரணம், எவ்வளவு பெரிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலும், இவர்களுக்கு சஸ்பெண்ட் என்ற எல்லையிலேயே தண்டனைகள் சுருங்கிவிடுகின்றன.. இதுதான் அடுத்த குற்றத்திற்கு துவக்க புள்ளியாகிறது.. எனவே, குற்றம் புரிந்த காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்கும்போதுதான் குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..!
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications