ஒரு தாத்தாவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. பொங்கல் பரிசில் பங்கு தராத ராசாத்தி.. வெட்டி கொன்ற கொடுமை!
மனைவியை கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.
சென்னை: இன்னும் இந்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு என்னவெல்லாம் செய்ய போகுதோ? தெரியவில்லை.
ஒரு பக்கம் இந்த பணத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள், மற்றொரு பக்கம் இந்த பணத்தை பெற்றுக் கொண்டாலும் அதனால் வரும் பிரச்சனைகளும் அதிகரித்துதான் வருகிறது.
ஆயிரம் ரூபாயை வாங்க ஏற்கனவே ரேஷன் கடைகளில் கூட்டம் முண்டியடித்து மரணம் வரை சென்றது. ராஜபாளையம் அருகே வடிவேலு என்பவர் இந்த ஆயிரம் ரூபாயை வாங்கி, எல்லா பணத்துக்கும் தண்ணி அடித்து விட்டு மனைவியையும் சரமாரியாக அடித்ததால் ஜெயிலில் கம்பி எண்ணவைத்து விட்டனர் போலீசார்.
இப்போது, இன்னொரு விவகாரமும் இது போல நடந்துள்ளது.

75 வயது ராமர்
உசிலம்பட்டி அருகே ஏழுமலை பகுதியை சேர்ந்த தம்பதி ராமர்-ராசாத்தி. கல்யாணம் ஆன நாளிலிருந்தே ரெண்டு பேருக்கும் மன பொருத்தம் இல்லாததால் தினமும் சண்டை, சச்சரவுமாக காலம் ஓடியுள்ளது. இப்போது ராமருக்கு வயது 75, ராசாத்திக்கு 65 ஆகிவிட்டது.

பாதி பணம் வேணும்
இந்த நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயை ரேஷன் கடைக்கு போய் ராசாத்தி வாங்கி வந்துவிட்டார். ஆனால் அந்த ரூபாயில் எனக்கு பாதி பணத்தை பிரித்து தா என்று ராசாத்தியிடம் ராமர் நேற்று சண்டைக்கு போய் இருக்கிறார். இந்த விஷயத்தை திரும்பவும் இன்னைக்கு காலையில் ஆரம்பித்தார் ராமர்.

அரிவாளால் வெட்டினார்
ஆனால் வீட்டு செலவுக்கு பணம் வேண்டும், தர முடியாது என்று ராசாத்தி சொல்லி இருக்கிறார். இதனால் ராமருக்கு ஆத்திரம் வந்து, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ராசாத்தியை வெட்டி விட்டார். இதில் ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கண்கலங்கிய ராமர்
தன் கண்முன்னாடியே ராசாத்தி துடிதுடித்து இறந்ததை பார்த்ததும், ராமர் நிலைகுலைந்து நின்றார். இப்படி அரிவாளால் வெட்டி விட்டோமே என்று அதிர்ச்சி அடைந்த ராமர், கண்கலங்கி போய்விட்டார். அதனால் நேராக போலீஸ் ஸ்டேஷன் போய் சரண்டர் ஆகிவிட்டார். இதையடுத்துபோலீசார் விரைந்து வந்து ராசாத்தி உடலை கைப்பற்றி, ராமரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications