Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதுமே அனல் பறக்கும். ஆனால், இந்த முறை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண் அரசியல் தலைவர்களின் ஆதிக்கம் 'டாப் கியரில்' எகிறிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் இந்த தேர்தலில் கலக்கும் பெண் தலைவர்களின் ரவுண்டு-அப்தான் இது..

Women Power in TN Elections 2026 From Premalatha Vijayakanth to Young Doctors Leading the Campaign Trail

களத்தில் 'கெத்து' காட்டும் பிரேமலதா விஜயகாந்த்!

கேப்டன் மறைவுக்குப் பிறகு தேமுதிக-வின் ஒற்றை நம்பிக்கையாக உருவெடுத்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த், இப்போது கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி ஒரு தேர்ந்த அரசியல் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்த கையோடு, அம்பத்தூர் முதல் தெற்கத்தி சீமை வரை சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். "கேப்டன் வழியில்..." என அவர் பேசத் தொடங்கினாலே தொண்டர்கள் மத்தியில் விசில் பறக்கிறது. பிரேமலதாவின் கம்பீரமான குரலும், சுருக்கமான அதேசமயம் சுளீரென்ற பேச்சும் இந்த முறை தேர்தல் களத்தில் தேமுதிக-வின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது.

கிருஷ்ணராயபுரம் 'துறுதுறு' திவ்யா இளமதி ரத்னா!

அதிமுக கோட்டையைக் காக்க, கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கிறார் அதிமுகவின் டாக்டர் எஸ். திவ்யா இளமதி ரத்னா.

எடப்பாடியாரின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளராக, தொகுதிக்குள் பம்பரமாய்ச் சுழன்று வருகிறார். அதிமுக-வின் பாரம்பரிய வாக்கு வங்கி ஒருபுறம் இருக்க, படித்த இளைஞர்களைக் கவரும் வகையில் இவரது பிரச்சார யுக்திகள் அமைந்திருக்கின்றன. "கல்வியும் ஆரோக்கியமும் தான் தொகுதிக்குத் தேவை" என்ற இவரின் ஸ்லோகன் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நாகை 'கடல்' மகள்கள் - சீமானின் 'பெண்' படை!

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பது வெறும் வார்த்தையல்ல, செயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சீமான். நாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரம் 'வேற லெவல்'.

மீனவப் பெண்களின் அடிப்படைப் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பேசும் இவர்களைக் காண மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை திரண்டு வருகிறார்கள். குறிப்பாக, 'அடுத்த முதலமைச்சர் இவங்க தான்' என மூதாட்டி ஒருவர் நெகிழ்ந்த வீடியோ, இணையத்தில் ட்ரெண்டிங் ஹிட்!

தாம்பரம் 'டாக்டர்' கிருத்திகா தேவி: மக்கள் செல்வாக்கு

தாம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்குப் பதில் திமுக களமிறக்கியிருக்கும் புது முகம் டாக்டர் கிருத்திகா தேவி. ஆரம்பத்தில் அதிருப்தி குரல்கள் எழுந்தாலும், களத்தில் இறங்கிய வேகத்திலேயே அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டார் இந்த மருத்துவர். இப்போது உட்கட்சி பூசலும் சரியாகிவிட.. களத்திலும், சோசியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறது .

மக்களுடன் மிக எளிதாகக் கலந்துரையாடுவது, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து 'பிரஸ்கிரிப்ஷன்' போலவே தீர்வுகளையும் முன்வைப்பது என தாம்பரம் ஏரியாவை தன் பக்கம் திருப்பிக்கொண்டு இருக்கிறார். மக்களின் மருத்துவர் என்ற பிம்பம் அவருக்கு வர தொடங்கி விட்டதாக உடன்பிறப்புகளே குதூகலிக்கிறார்கள்!

அவிநாசியின் 'யங்' ஸ்டார்: டாக்டர் வி. கோகிலமணி!

"திமுக-வில் மட்டுமே இது சாத்தியம்" என நெகிழ்ச்சியோடு பேசுகிறார் டாக்டர் வி. கோகிலமணி. வெறும் 28 வயதே ஆன இந்த இளம் மருத்துவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியின் திமுக வேட்பாளர்.

கட்சிப் பாரம்பரியம் தாண்டி, ஒரு இளம் பெண்ணாகவும், மருத்துவராகவும் இவர் முன்வைக்கும் 'மாற்றத்திற்கான' முழக்கங்கள் அவிநாசி இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் மிக இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையுடன், கிராமம் கிராமமாகப் புகுந்து வாக்கு சேகரித்து வருகிறார் இந்த 'ஜூனியர்' டாக்டர்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை... என பாரதி கண்ட புதுமைப் பெண்களாக, 2026-ல் கோட்டையை நோக்கி நடைபோடும் இந்தப் பெண் வேட்பாளர்களின் வெற்றிப் பயணம் எப்படி அமையப்போகிறது என்பதைப் பார்க்கத் தமிழகமே காத்திருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+