மாணவர்கள் + பெண்கள்.. முத்து முத்தாக 3 முக்கிய அறிவிப்புகள்.. குட் நியூஸ் சொன்ன ஸ்டாலின்.. அடிதூள்
சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் 1 அறிவிப்பு பெண்களையும், 2 அறிவிப்புகள் மாணவர்களையும் மையப்படுத்தி வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
அதை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவிப்பு
இன்றய பட்ஜெட் அறிவிப்புகளில் இடம்பெற்ற 3 முக்கியமான அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. அதன்படி மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த அறிவிப்பை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள்
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள்
அதேபோல் இரண்டாவதாக, தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளின் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக 1547 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது 500 கோடி தமிழ்நாடு முழுக்க மதிப்பில் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் முதல் கட்டமாக வென்ற நிலையில் தற்போது தமிழ்நாடு முழுக்க அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை பட்ஜெட்
அதேபோல் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டிலும் மாணவர்களுக்கு என்று சிறப்பு அறிவிப்புகள் இடம் பிடித்து உள்ளன. சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேயர் பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் சிறுதீனி வழங்க சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ₹1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தி கடந்த ஒரு வாரத்தில் வெளியான இந்த 3 அறிவிப்புகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications