ஸ்கூட்டி, தங்கம்.. தலையெழுத்தே ‘அவங்க’ கையில தான் இருக்கு! தமிழக அரசியலை தீர்மானிக்க போகும் பெண்கள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் திமுகவும் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டன. இந்த ஆண்டு தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான சலுகைகளை வாரி வழங்க இரு கட்சிகளுமே தயாராகி வருகின்றன. திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஒரு படி மேலே போய் பெண்களுக்கு ஸ்கூட்டி, மீண்டும் தாலிக்குத் தங்கமென தற்போதே வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதுமட்டுமல்லாம சீமான், விஜயும் தங்கள் பங்குக்கு களத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களுக்கான வாக்குகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. திமுகவும் அதிமுகவும் ஏற்கனவே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், இரு கட்சிகளுமே பெண்களுக்கான சலுகைகள், உதவித் திட்டங்கள் போன்றவற்றை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தத் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான மேற்கு மண்டல பெண்கள் மாநாடு என்ற பெயரில் திமுக சமீபத்தில் பெரிய அளவில் கூட்டத்தை நடத்தியது. அதில் சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக தேர்தல்
இதற்கு ஒரு நாள் முன்பே, "அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், தாலிக்குத் தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும் அவர் முன்பே கூறிவிட்டார். ஏற்கெனவே கடந்த தேர்தலில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தது நினைவில் இருக்கலாம்.
பெண்கள் பாதுகாப்பு
இந்த முறை அந்தத் தொகையை மேலும் உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் பழனிசாமி. தங்களது ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை வலியுறுத்தும் விதமாக அதிமுக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
திமுக திட்டங்கள்
மறுபுறம், திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியிருப்பதை பெருமையாகச் சொல்கிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி, மகப்பேறு விடுப்பு அதிகரிப்பு, உள்ளாட்சிகளில் 50% இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை திமுக முன்வைத்து வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும் பெரிய அளவில் மகளிர் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த இரண்டு பெரிய கட்சிகளும் பெண்களுக்கான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியலில் உருவாக்கியுள்ள புதிய அலைவும் கவனிக்கத்தக்கது. பெண்களுக்கான பெரிய அளவு தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் சொல்லாதிருந்தாலும், விஜய்யின் பொதுக்கூட்டங்களில் பெண்கள் பங்கேற்பது கணிசமாக அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தில் எம்.ஜி.ஆருக்கு பெண்களிடையே கிடைத்த ஆதரவுடன் ஒப்பிடும் வகையில் விஜய்க்கும் பெண்கள் தன்னார்வமாக கூடுகின்றனர் என்பதே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சீமான் அரசியல்
அதேபோல், நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் 117 தொகுதிகளில் பெண்களையே வேட்பாளர்களாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இது இளம் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, 2026 தேர்தலில் பெண்களே முக்கிய தீர்மானிக்கும் வாக்காளர்களாக மாறியிருக்கிறார்கள். அதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் பெண்களுக்கான சலுகைகள், பாதுகாப்பு, உரிமைகள் போன்ற விஷயங்களை மையப்படுத்தி தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் காலத்தில் இன்னும் பல புதிய அறிவிப்புகள் வரலாம் எனவும் கூறப்படுகிறது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications