சீட்டு கேட்டு ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற மகளிரணியினர்.. குடுமியை பிடித்து இழுத்து சண்டையிட்டதால் பரபரப்பு!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வந்த இரு வேறு பகுதியை சேர்ந்த மகளிரணியினர் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி வெளியாகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீட்
இந்த நிலையில் தேர்தல் போட்டியிட கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலை பொருத்தமட்டில் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதால் நிர்வாகிகள் சீட் கேட்டு போட்டி போடுகிறார்கள். அந்த வகையில் அதிமுக மகளிரணியினர் இரு வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் அதிமுகவில் விருப்பமனுக்களை தாக்கல் செய்து யாருக்கு கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.

மகளிர் அணியினர்
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் கனகலட்சுமி (46) நேற்று மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் ஷகிலா, மதுரவாயலைச் சேர்ந்த அதிமுக மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோரும் வந்துள்ளனர்.

ஆத்திரமடைந்த இரு தரப்பு
இவர்களுக்குள் யார் முதலில் போவது என்ற போட்டியில் ஷகிலா, மஞ்சுளா தரப்பினர் கனகலட்சுமி தரப்பை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முடியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

படுகொலைகள்
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்தவர்களும் ஏற்கெனவே ஓபிஎஸ்ஸை பார்க்க வந்தவர்களும் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கனகலட்சுமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் மஞ்சுளா, ஷகிலா உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் அறிவித்தார்கள், ஒரு பக்கம் படுகொலைகள் நிகழ்கின்றன. மறுபக்கம் இது போன்று கோஷ்டி மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications