பாசத்தோடு தங்கை வளர்மதிக்கு கேக் ஊட்டிய அண்ணன் எடப்பாடி பழனிசாமி... அவர் மட்டும் மிஸ்ஸிங்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் தனது கைகளால் கேக் வெட்டி பெண் நிர்வாகிகளுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முந்தைய ஆண்டுகளில் ஓபிஎஸ்சும் இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த விழாவில் ஓ பன்னீர்செல்வம் மட்டும் இல்லை.
மார்ச் 8ம் தேதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பில் ராயப்பேட்டை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்படும்..

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவரை மகளிர் அணி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் உள்ளே எந்த எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, மகளர் அணி நிர்வாகிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பிரம்மாண்டமாக வாங்கி வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி மகளிர் தின விழாவை எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எடப்பாடி பழனிசாமி கேக் ஊட்டிவிட்டார். தொடர்ந்து பல்வேறு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தன் கைகளாலேயே வெட்டி எடப்பாடி வழங்கினார்.. பின்னர் தேர்ந்தெடுக்கப்ட்ட மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இந்த விழாவில் மிகவும் உற்சாகமாக காணப்பட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, அனைவரையும் அருகே அழைத்த கேக்கை வாங்க வைத்தார். இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமியுடன் கேபி முனுசாமி. எஸ்பி வேலுமணி உள்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதுதவிர முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அப்சரா, நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பல்வேறு அதிமுக முக்கிய மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 2022ம் ஆண்டு இதேபோன்ற மகளிர் விழாவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து கேக் வெட்டி மகளிருக்கு ஊட்டிவிட்டு மகளிர் தின விழாவை கொண்டாடினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளான இபிஎஸ் மற்றும் கேக் வெட்டி கொண்டாடுகிறார். இரட்டை தலைமை பிரச்சனையில் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications