எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்.. சட்டப்பேரவையை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம்.. வைகைச்செல்வன்!
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாம் தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நாளை தொடங்கவுள்ளது. இதனிடையே சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் செயல்பட்டு வருகிறாா். அவா் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் துணைத் தலைவராக ஆா்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி பல முறை கடிதம் கொடுத்துள்ளாா்.

சபாநாயகர் முடிவு என்ன?
அதேபோல் ஓ.பன்னீா்செல்வமும் அதிமுக தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், எங்களை ஆலோசித்தே எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவா் அப்பாவு இன்னும் அவரின் முடிவை அறிவிக்கவில்லை.

எம்எல்ஏ-க்கள் பலன்
இந்த நிலையில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினா்களின் பலம் 66 ஆக உள்ளது. இதில் தனியாகச் செயல்பட்டு வரும் ஓ பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 எம்எல்ஏ-க்கள் தவிர இதர எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவுள்ளனா்.

இபிஎஸ் புறக்கணிப்பு?
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் முன் வரிசையில் அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்படும். அதனால், ஓபிஎஸ் அருகே இபிஎஸ் அமர விரும்பாததுடன், அதிமுகவின் சாா்பில் ஓபிஎஸ் பேரவையில் இடம்பெறுவதையும் அவா் விரும்பாமல் இருந்து வருகிறாா். இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி பேரவையை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகை செல்வன் பேட்டி
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கவேண்டும். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேவேளையில், சபாநாயகர் பெரும்பான்மை முடிவின்படி நியாயமாக நடக்கவேண்டும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. இதில் திமுக அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டப்பேரவையை புறக்கணிக்கவும் தயங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications