பாக்யராஜ் இறுதி சடங்கில் நடந்த சம்பவம்.. அடுத்து நீ அனாதையா சாகுவ..! பார்த்திபனை பார்த்து சாபம் விட்ட பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு இன்னும் தமிழ் சினிமாவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பாகவே இருந்து வருகிறது. குடும்பத்தினர் மட்டுமல்ல, அவருடன் பல ஆண்டுகள் பயணித்த சீடர்களும், நண்பர்களும் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. அவர்களில் மிகவும் உடைந்து போனவர்களில் ஒருவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, அவரிடமிருந்தே திரைக்கதை எழுதும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பின்னர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் பார்த்திபன். அதனால் தான், பாக்யராஜின் மறைவு செய்தி வந்த தருணம் முதல் இறுதிச் சடங்கு முடியும் வரை, அவர் குடும்ப உறுப்பினர் போலவே அருகில் இருந்து ஒவ்வொரு வேலையையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

பாக்யராஜ் இறுதி ஊர்வலம்

பாக்யராஜின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வருவது, வந்த பிரபலங்களை வரவேற்பது, இறுதி ஊர்வல ஏற்பாடுகள், சாந்தனுவுக்கு துணையாக இருப்பது என ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார். சரத்குமாருடன் சேர்ந்து இறுதி ஊர்வல வாகனத்தையும் வழியனுப்பிய காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்தன.

அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் அனைவரும் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியபோது, தனது குருநாதருக்கு வித்தியாசமாக மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தார் பார்த்திபன்.

K Bhagyaraj Parthiban Shanthanu

பார்த்திபன் செய்த செயல்

நள்ளிரவிலேயே ஒரு ஆர்ட் டைரக்டருக்கு போன் செய்து, "அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ்" என்று பாக்யராஜின் கையெழுத்து வடிவில் ஒரு சிறப்பு அட்டையை தயாரிக்க வைத்தார். அந்த அட்டையை பாக்யராஜின் இதயத்தின் மீது வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சாந்தனு கற்பூரம் ஏற்றி இறுதி மரியாதை செய்தபோதும், அந்த அட்டை அவருடைய உடலுடனேயே இருந்தது. தகன மேடைக்குள் செல்லும் கடைசி நொடியிலும் அந்த அட்டை அவருடன் இருந்ததாக பார்த்திபன் கண்கலங்கியபடி கூறியிருந்தார்.

ஆனால் இத்தனை பாசத்துடனும், மரியாதையுடனும் தனது குருநாதருக்காக ஓடிய மனிதருக்கே, யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இயக்குனர் பார்த்திபன் பேட்டி

சமீபத்திய பேட்டியில் இதை பகிர்ந்த பார்த்திபன், பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவரிடம் இருந்து தனக்கு நள்ளிரவில் குரு மெசேஜ் வந்ததாக கூறினார்.

அந்த மெசேஜில், "நீதான் பாக்யராஜை பெத்து வளர்த்த மாதிரி எல்லா வேலையும் செய்ற... மற்றவர்களையும் கூப்பிட்டு வேலை சொல்லியிருக்கலாம். யாரையும் மதிக்க மாட்டே. அதனால்தான் நீ பொண்டாட்டி, பிள்ளை இல்லாம கஷ்டப்படுற. இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் செத்துப் போவ. உனக்கு யாருமே வரமாட்டாங்க" என்று மிகவும் கடுமையான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்ததாம்.

K Bhagyaraj Parthiban Shanthanu

பார்த்திபனுக்கு சாபம்

அந்த மெசேஜை படித்ததும் பார்த்திபன் பதில் கூட அனுப்பவில்லை. மாறாக, அதை சாந்தனுவிடம் மட்டும் காட்டியதாக அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

"ஒரு குடும்பம் தந்தையை இழந்து கதறிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்காக ஓடி ஓடி உதவி செய்த மனிதருக்கு இப்படி சாபம் விடுறதா?", "இறந்தவருக்கு கடைசி மரியாதை செய்ய ஓடினதும் தவறா?", "இப்படிப்பட்ட நேரத்திலும் பொறாமை பார்க்கிற மனநிலை எப்படி வருகிறது?" என்று பலரும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

K Bhagyaraj Parthiban Shanthanu

மேலும், "பாக்யராஜின் குடும்பத்துக்கு உறவினராகவே பார்த்திபன் இருந்தார். சாந்தனு தனியாக நின்றிருக்கவில்லை; ஒவ்வொரு இடத்திலும் பார்த்திபன் தோளாக நின்றார். அதைக் கூட சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லையா?" என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாக்யராஜ் மறைந்த நாளில் இருந்து இன்று வரை பார்த்திபன் வெளியிடும் ஒவ்வொரு பதிவும், அவர் தனது குருநாதர் மீது வைத்திருந்த மரியாதையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி வருகிறது.

ஆனால் அந்த அன்புக்கே பதிலாக இப்படி ஒரு சாபம் கலந்த மெசேஜ் வந்திருப்பது ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது. அதுபோல இன்னொரு விஷயத்தையும் பார்த்திபன் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அதாவது பாக்யராஜ் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் செய்தியாளர்கள் மட்டுமல்லாமல் பலர் செல்போனை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

வருத்தத்தில் பார்த்திபன்

பிணம் தின்னும் கழுகுகள் போல வட்டமிட்டார்கள் அங்கு யாரையும் நிற்க விடாமல் தள்ளி கொண்டும் இடித்து கொண்டும் வீடியோ எடுக்குற மாதிரி மோசமாக நடந்து கொண்டார்கள். இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும் முறைப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றும் பார்த்திபன் வருத்தத்துடன் பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+