500 ரூபாயில் கல்யாணம் முடித்த ஐஏஎஸ் அதிகாரிகள்.. ரூ.500-ல் இது சாத்தியமா? ஆச்சரியம் கிளப்பிய தம்பதி
சென்னை: வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்து கொண்ட தம்பதியினரை பற்றிதான் இப்போது இணையத்தில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.. 500 ரூபாயில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது கூடுதல் தகவலாகும். யார் இவர்கள்?
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.. வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால், திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.

திருமணங்கள்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும்.
மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்.. ஆனால், ராஜஸ்தானில் நடந்துள்ள திருமணம் ஒட்டுமொத்த பேரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
யாரிந்த ஜோடி: ராஜஸ்தானில் உள்ள அல்வாரை சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்ட்... பஞ்சாபின் ஜலாலாபாத்தை சேர்ந்தவர் சலோனி சிதானா. இவர்கள் இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர்.. தற்போது இருவருமே மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.. எனவே, அங்கேயே தங்களது திருமணத்தையும் நடத்த முடிவு செய்தார்கள்.

மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்த மணமக்கள் இருவரும், தங்களது குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.. மாலையை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டனர்.. பிறகு, திருமண சடங்குகள் அடுத்தடுத்து நடந்த நிலையில், வெறும் ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்துவிட்டனர்.
வியப்பு திருமணம்: அதுமட்டுமல்ல, இந்த திருமணத்திற்காக 2 பேருமே, 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்து கொண்டுள்ளனர்.. 3வது நாள் 2 பேரும் பணிக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால் இந்த கல்யாணம் கடந்த 2016 -ம் ஆண்டில் நடந்துள்ளது.. இப்போது இந்த விஷயம் வெளியே பரவி, இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து திருமணம் செய்வோர் மத்தியில், வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications