சென்னை மக்களே என்ஜாய் பண்ணுங்க.. டிச.1ல் Wonderla திறப்பு! மொத்தம் 43 Ride.. டிக்கெட் இதுதான்
சென்னை: சென்னை அருகே 65 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.600 கோடி செலவில் பிரமாண்டமாக ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 1ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு டிசம்பர் 2ம் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள விளையாட்டுகள் என்னென்ன? டிக்கெட் எவ்வளவு? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா இள்ளளூர் கிராமத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.

மொத்தம் 65 ஏக்கரில் ரூ.611 கோடி செலவில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்காவின் பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் மாணவ-மாணவிகளின் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தையொட்டி திறக்கப்பட உள்ளது.
அதன்படி ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா வரும் டிசம்பர் 1ம் தேதி திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தான் வொண்டர்லாவை திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு டிசம்பர் 2ம் தேதி முதல் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் இந்த வொண்டர்லா பொழுது போக்கு பூங்கா செயல்படும். இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றிய மக்கள் ஜாலி பண்ணலாம்.
இங்கு மொத்தம் 43 வகையான ரைடுகள் உள்ளன. 16 வாட்டர் ரைட், குடும்பமாக செல்லும் 10 ரைடுகள், குழந்தைகளுக்கான 8 ரைடுகள், 9 ஹைத்ரில் ரைடு உள்பட உலக தரத்தில் மொத்தம் 43 ரைடுகள் உள்ளன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இங்கு ஜாலியாக விளையாடி மகிழலாம். Pay Once play Unlimited என்ற முறையில் மக்கள் என்ஜாய் பண்ணலாம். டிக்கெட் கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் நாள் முழுவதும் விளையாடி மகிழலாம்.
குறிப்பாக இந்தியாவின் உயரமான ‛ரோலர் கோஸ்டர்அமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை Swiss ride Manufacutrer Bollliger & Mabillard நிறுவனம் அமைத்துள்ளது. பிரிட்டனின் லண்டன் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ரோலர் கோஸ்டருக்கு நிகராக இது அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் பொதுமக்களுக்கு ‛த்ரில்' அனுபவத்தை தர உள்ளது.
இதற்கான டிக்கெட் கட்டணம், சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என்று தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் சிறுவர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,191 ஆக உள்ளது. பெரியவர்கள் என்றால் ரூ.1,489 ஆகும். முதியவர்கள் என்றால் ரூ.1,117 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வார இறுதி நாட்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும்.
வார இறுதி நாட்களில் சிறுவர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,423, பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணம்ரூ.1,779, முதியவர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,334 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் நேரத்தை எடுத்து கொண்டால் வார நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையும், வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை தினங்கள் என்றால் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications