சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோதிமணியின் கையை பிடித்து.. தரதரவென இழுத்துபோன போலீஸ்.. பொங்கிய விசிக.. டென்ஷனில் கதர்கள்.. கூல் பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிமணி எம்பி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று, காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?

கடந்த சில நாட்களாகவே, நேஷனல் ஹெரால்டு வழக்கு சூடுபிடித்துள்ளது.. இதையடுத்து, ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் நேரில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்..

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டு காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர்.. தலைவர்களும் தொண்டர்களும் திரண்டு டெல்லியில் போராடினார்கள்..

ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து! பதாகைகளுடன் வராதீர்கள்: சபாநாயகர் வார்னிங்ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து! பதாகைகளுடன் வராதீர்கள்: சபாநாயகர் வார்னிங்

 திணறிய தலைநகரம்

திணறிய தலைநகரம்

இதையடுத்து, சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜரானார்.. அப்போதும், காங்கிரஸ் கட்சியினர் போராடினார்கள்.. நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யதை கணடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இப்படி அடுத்தடுத்த காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களால், டெல்லியே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில், இன்றைய தினமும் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது.. பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றுக்கு எதிராகவும் நாடு தழுவிய போராட்டத்தை இன்று காங்கிரஸார் முன்னெடுத்தனர்..

 குண்டுக்கட்டாக கைது

குண்டுக்கட்டாக கைது

மேற்கண்ட அனைத்து போராட்டங்களிலுமே, கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டார்.. இன்றும்கூட, போலீசார் அவரை குண்டுகட்டாக கைது செய்தனர்.. போராடிக் கொண்டிருந்த ஜோதிமணியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்று, போலீசார் வேனில் ஏற்றினர்.. அப்போது, ஜோதிமணி, மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டேயிருந்தார்.. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜோதிமணியும் இந்த வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

வன்னியரசு

வன்னியரசு

அத்துடன், இரக்கமற்று மக்களை சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். மக்களுக்காகக் களம் காண்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.. ஜோதிமணியின் இந்த ட்வீட்டை, விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசும் பதிவிட்டுள்ளார்..

 ஆடைகளை கிழித்த போலீஸ்

ஆடைகளை கிழித்த போலீஸ்

"சர்வதிகாரத்தின் உச்சம். மக்களுக்காக போராடுவது குற்றமா? தேசவிரோதபாஜக" என்று பதிவிட்டு கடுமையாக வன்னியரசு சாடி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பும்கூட, விலைவாசியை கண்டித்து மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து லோக்சபாவில் பேசியிருந்தார் ஜோதிமணி.. அதேபோல, அமலாக்கத்துறைக்கு எதிராக கடந்த மாதம் போராட்டம் நடந்தபோதும், ஜோதிமணி பதிவிட்ட வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியது..

திணறல்

திணறல்

தன்னை கிரிமினல் போல கைது செய்ததுடன், டெல்லி போலீசார் தன்னுடைய ஆடையை கிழித்ததாக மனு அளித்திருந்தார்.. மேலும், கைது செய்யப்பட்டு போலீஸ் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டபோது, வீடியோ பதிவு எடுத்து, அதை ஜோதிமணியே வெளியிட்டிருந்ததுடன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்திருந்தார்.. அதுபோலவே, இன்றைய போராட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
wont fear oppression, says karur MP jothimani, and dragged by the delhi Police ஜோதிமணியை குண்டுக்கட்டாக இழுத்து சென்று டெல்லி போலீஸ் கைது செய்தது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X