மோடி பற்றி பேசியதை வாபஸ் வாங்க மாட்டேன்.. நான் எந்த கட்சிக்கும் சப்போர்ட் இல்லை.. இளையராஜா பரபரப்பு!
சென்னை: பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்து இருப்பதாக நியூஸ் 18 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
Recommended Video
அந்த முன்னுரைதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ள இளையராஜா.. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

மோடி அம்பேத்கர்
அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி.

பாராட்டு
பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவின் மூலம் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார் மோடி, என்று இளையராஜா தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக எதிர்ப்பாளர்கள் பலர் இளையராஜா கருத்தை கடுமையாக விமர்சித்தனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தி உள்ளார்.

பாஜக இளையராஜா
இதை விமர்சிக்க கூடாது என்று பாஜக தலைவர்கள் பலர் இளையராஜாவிற்கு ஆதரவாக பேசினார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார். கங்கை அமரன் இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மோடி குறித்து இளையராஜா பேசியது பற்றி அவருக்கே போன் செய்து கேட்டேன். உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று நேற்று இளையராஜாவிடம் கேட்டேன்.

மோடி இளையராஜா கருத்து
அதற்கு பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார். அது தன்னுடைய சொந்த கருத்து என்றார். அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று என்னிடம் கூறினார். பிரதமர் மோடி பற்றிய அந்த புத்தகத்தை நான் முழுமையாக படித்தேன். புத்தகத்தை முழுமையாக படித்த பின்புதான் நான் என் கருத்தை தெரிவித்தேன்.

உண்மையை மறைக்க முடியாது
மோடியின் பல திட்டங்களை மறைக்கப்பட்டுவிட்டால்.. அவை மறைந்துவிடுமா என்று என்னிடம் இளையராஜா கேட்டார். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். நான் படத்திற்கு போட்ட ட்யூனை திரும்ப பெற மாட்டேன். அதேபோல்தான் நான் சொன்ன கருத்தும். அதை திரும்ப பெற வேண்டிய அவசியம் கிடையாது.

இளையராஜா மோடி அம்பேத்கர்
உண்மையை சொல்ல நான் தயங்க மாட்டேன் என்று என்னிடம் இளையராஜா தெரிவித்தார். என்னுடைய கருத்தை நான் தெரிவிப்பேன். அதை என்னுடைய கருத்தாக மட்டும் நினையுங்கள். அதை ஏன் தவறாக நினைக்க வேண்டும். என்னை பற்றி விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும். அந்த புத்தகத்திற்கு விமர்சனம் கேட்டார்கள். அதற்காக சொன்னேன். அவ்வளவுதான், என்று இளையராஜா என்னிடம் தெரிவித்தார் என கங்கை அமரன் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications