இந்த நாட்ல வாரத்துக்கே 24.7 மணி நேரம்தான் வேலை! குறைந்த, அதிக வேலை நேரம் கொண்ட நாடுகள் எவை?
சென்னை: வாரம் 70 மணி நேரம் இந்திய இளைஞர்கள் உழைக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்து உள்ள நிலையில், உலகில் குறைந்த பணி நேரம் கொண்ட நாடு எது, அதிக பணி நேரங்களை கொண்ட நாடுகள் எவை என விரிவாக பார்க்கலாம்.
பிரபல மென்பொருள் நிறுவனமான இன்போசிசின் நிறுவனர் நாராயணமூர்த்தி வேலை நேரம் தொடர்பாக தெரிவித்த கருத்து விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்தியா கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை போன்று மீண்டும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்தின்படி பார்த்தால் வார விடுமுறை எடுக்காமல் தினசரி 10 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே சாத்தியம்.

இது தொழிலாளர்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்றும், தொழிலாளர் புரட்சியின் மூலம் கொண்டு வரப்பட்ட 8 மணி நேர வேலை நேர கொள்கைக்கு எதிரான முதலாளித்துவ மனநிலை எனவும் பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது தினமும் 8 மணி நேர வேலை வாரம் ஒன்று அல்லது 2 நாட்கள் விடுமுறை என நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் உலகின் மற்ற நாடுகளில் வாரத்துக்கு எவ்வளவு வேலை நேரம் பின்பற்றப்படுகிறது என்று பார்ப்போம்.
உலக தொழிலாளர் அமைப்பு வெளியிட்டு இருக்கும் பட்டியலின்படி உலகிலேயே குறைவான வார வேலை நேரத்தை கொண்ட நாடாக தெற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்து உள்ள வனுவாடு என்ற நாட்டில் வாரத்துக்கு 24.7 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அதே தெற்கு பசிபிக் நாடாக கிரிபாட்டி உள்ளது. அங்கு 27.3 மணி நேரம் பணிநேரமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஒரு நபர் வாரம் 28.6 மணி நேரம் சராசரியாக வேலை செய்கிறார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஒருவர் சராசரியாக வாரம் 28.8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 29.5 மணி நேரம் மட்டுமே வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வாரத்துக்கு 32.3 மணி நேரம் என்பது சராசரி வேலை நேரமாக உள்ளது. பிரிட்டனில் வாரத்துக்கு 35.9 மணி நேரம் என்பது வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நபர் வாரத்துக்கு சராசரியாக 36.4 மணி நேரம் மட்டுமே பணிபுரிகிறார்.
சிங்கப்பூரில் 42.6 மணி நேரம் என்பது தனி நபர் சராசரி வாராந்திர பணி நேரமாக உள்ளது. மலேசியாவில் 43.2 மணி நேரம் வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளை எடுத்துக்கொண்டால் வங்கதேசத்தில் 46.9, பாகிஸ்தானில் 46.7, மாலத்தீவில் 46.2, சீனாவில் 46.1, மியான்மரில் 44.6, நேபாளத்தில் 40.3, ஆப்கானிஸ்தானில் 37.9, இலங்கையில் 36.2 என்பது வாராந்திர சராசரி பணிநேரமாக உள்ளது.
அதிக பணிநேரங்களை கொண்ட நாடுகளை எடுத்துக்கொண்டால் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம்தான் உள்ளது. அங்கு வாரத்துக்கு சராசரியாக 52.6 மணி நேரம் பணிபுரிகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா உள்ளது. அங்கு வாரத்துக்கு 50.8 மணி நேரம் சராசரி பணி நேரமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பூடானில் வாராந்திர சராசரி பணி நேரம் 50.7 ஆக இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications