டிட்டோ திமுக.. அண்ணிக்கு கிடைக்க போகும் "புல் பவர்".. 2 முக்கிய முடிவுகள்.. குஷியில் விஜயகாந்த் கட்சி

பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி தரப்போவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தம் புதிய பொலிவுடன் தயாராகி கொண்டிருக்கிறது தேமுதிக.. அக்கட்சியில் விரைவில் 2 விதமான மாற்றங்கள் ஏற்பட போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தேமுதிகவின் அரசியல் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.. இதை செங்குத்தாக தூக்கி நிறுத்த இன்று வரை அந்த கட்சியில் முடியவில்லை.. விஜயகாந்த்துக்கு உடம்பு மட்டும் தேறியிருந்தால், இந்நேரம் அந்த கட்சிக்கு இருக்கும் மதிப்பே வேற லெவலில் இருந்திருக்கும்..

தேர்தல் என்றாலே விஜயகாந்த்துடன் கூட்டணி வைக்க முந்தியடித்து கொண்டு காலமும் ஒன்று இருந்தது.. தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கிவிட்ட நிலையில், கட்சி நடவடிக்கைகளை பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்..

அப்செட்

அப்செட்

ஒருபக்கம் சுதீஷ், இன்னொரு பக்கம் விஜய பிரபாகரன் கவனித்து கொண்டாலும்கூட, பெரிய அளவிலான செல்வாக்கை தேமுதிகவால் பெற முடியவில்லை.. சட்டசபை தேர்தலில் கடைசிவரை கூட்டணி வைக்க அதிமுக அழைக்காமலேயே இருந்ததை பிரேமலதா இன்னமும் மறக்கவில்லை.. எங்களை கூப்பிட்டு பேசவில்லை என்பதை வெளிப்படையாகவே பலமுறை சொல்லியும்கூட அதிமுக மேலிடம் தேமுதிகவை கண்டுகொள்ளவில்லை..

கூட்டணி

கூட்டணி

திமுகவிடம் நூல் விட்டும், எதுவும் பலனளிக்கவில்லை.. தனித்துவிடப்பட்ட நேரத்தில் கடைசி நேரத்தில் அமமுக கூட்டணி கதவை திறந்தது.. ஆனாலும், தேமுதிக படுதோல்வி அடைந்தது.. உள்ளாட்சித் தேர்தலில் இந்த நிலைமை இன்னும் மோசமாகியது. அடுத்தடுத்த தேர்தல்கள் தமிழகத்துக்கு வர உள்ள நிலையில், இப்போதே தேசிய மற்றும் மாநில கட்சிகள் ரெடியாகி வரும் நிலையில், தேமுதிக தனிமையில் தவித்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 6ம் தேதி அக்கட்சியின் அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது..

திமுக

திமுக

அப்போது 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பிரேமலதாவை செயல் தலைவராக்க வேண்டும், இன்னொன்று, விஜய பிரபாகரனிடம் இளைஞரணியை ஒப்படைக்க வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை பெரும்பாலான நிர்வாகிகள் சொல்லி உள்ளனர். செயல் தலைவர் என்பதே திமுக பாணி அரசியல்தான்... அன்றைக்கு கருணாநிதி உடல் நலம் பாதித்தபோது, இதே செயல் தலைவர் பதவிதான் ஸ்டாலினுக்கு தரப்பட்டது.. அதற்கான அதிகாரமும் அளிக்கப்பட்டது.. அந்த பதவியை ஸ்டாலின் மிகசரியாக பயன்படுத்தி கொண்டார் என்றே சொல்ல வேண்டும்..

பலம்

பலம்

அதே ரூட்டைதான், தேமுதிக பிடித்துள்ளது.. பிரேமலதா செயல் தலைவர் ஆனால், அது அக்கட்சிக்கு பலம் என்றாலும், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு, அல்லது தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பலத்தை பெற்றுதருமா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அதேசமயம், தேமுதிகவில் எத்தனையோ பேர் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாகி, மாற்று கட்சிக்கு தயாராகி வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

நன்மதிப்பு

நன்மதிப்பு

இந்த சூழலில், பிரேமலதா சார்ஜ் எடுத்தால், நிச்சயம் கட்சி தாவலை அது கட்டுப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.. எதையும் துணிச்சலாக பேசும் பிரேமலதாவுக்கு கட்சியில் நன்மதிப்பு இப்போதும் இருக்கிறது.. அதனால், நிர்வாகிகள் விடுத்த கோரிக்கைக்கு நிச்சயம் பிரேமலதா செவிசாய்ப்பார் என்றும் சொல்கிறார்கள்.. மேலும் கட்சியை மகன் பொறுப்பில் விடாமல், தானே வழிநடத்துவது தொண்டர்களுக்கும் நல்ல முடிவாகவே தெரிகிறது.. இந்த மாசம் அக்கட்சியின் பொதுக்குழு நடக்க உள்ளதால், அப்போது இதற்கான ரிசல்ட் தெரிந்துவிடுமாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+