ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாக உருவெடுக்கிறது சென்னை மெரீனா.. சர்வதேச வசதிகள்.. இனி வியக்க போறீங்க!
சென்னை: மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பகுதி விரைவில் நீலக் கொடி மண்டலமாக மாற உள்ளது. ₹6 கோடி நிதியுதவியுடன் சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச்சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை இடம்பெறும்.
இங்கே வணிகர்கள் கடைபோட தடைசெய்யப்பட்டுள்ளனர். GCC ஆனது மெரினா முழுவதும் படிப்படியாக இதேபோல் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் லேபிளான ப்ளூ பிளாக் சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையானது, புகழ்பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற உள்ளது. இதை செயல்படுத்துவதற்கான டெண்டர்ள் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை உள்ளது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருங்கிவிட்டன, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) இதற்காக தயாரித்து உள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர். திமுகவின்கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங், சென்னை மெரினா கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை, காமேஸ்வரம் கடற்கரை ஆகியவற்றுக்கான டிபிஆர்களை தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (என்சிஎஸ்சிஎம்) சமர்ப்பித்துள்ளது என்றார். நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் சில்வர் பீச் அமைக்கப்படுகிறது.
கோவளம் கடற்கரை நீலக் கொடி சான்றளிப்புத் திட்டத்திற்கான தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும், மேலும் இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இது நீல கடற்கரையாக சான்றளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன.
1.நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள்
2. மனோரா, தஞ்சாவூரில் உள்ள சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்
4. சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகள்
5. மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவழ மறுசீரமைப்பு
6. ப்ளூ பிளாக் கடற்கரைகள்
7. கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
8. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்கள்
9. எண்ணூர் சிற்றோடை மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் இந்த வருடமே நிறைவேற்றப்படும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications