Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக நாடுகளுக்கே வழிகாட்டிய 'தோழி' விடுதி.. சிலிர்த்து போயிட்டாங்களே "அண்ணா ஜெர்டே".. இதுதான் மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் தோழி விடுதியைப் பார்வையிட்ட உலக வங்கி குழுவினர், இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகப் பாராட்டு தெரிவித்தனர்.

பணிக்குச் செல்லும் பணிகள் தங்க ஏதுவாக தமிழ்நாடு அரசு சார்பில் தோழி மகளிர் விடுதி கட்டப்படுகிறது. மிகக் குறைந்த கட்டணத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் இந்த விடுதியில் தங்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.

World Bank team appreciated Tamil Nadu govt for its Thozhi viduthi

இத்திட்டத்திற்கு பணிக்குச் செல்லும் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தோழி விடுதிகளைத் தமிழ்நாடு அjசு உலக வங்கியின் நிதி உதவியுடன் தான் அமைத்து வருகிறது.

தோழி விடுதி: அதன்படி நேற்றைய தினம் தாம்பரம் சானடோரியம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தோழி விடுதியை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த விடுதியில் அதிகபட்சம் 400 பேர் வரை தங்க முடியும். தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ஜட்ஜ் காலனியில் கட்டப்பட்டுள்ள இந்த தோழி விடுதியை நேற்றைய தினம் உலக வங்கி குழு ஆய்வு செய்தது. அங்கே உள்ள வசதிகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

World Bank team appreciated Tamil Nadu govt for its Thozhi viduthi

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே (Anna Bjerde) உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சந்தித்துப் பேசினார்.

வழிகாட்டி திட்டம்: "அப்போது, உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் , தமிழக அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான "தோழி" விடுதியைப் பார்வையிட்டதாகவும், மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்துக்குத் தனது பாராட்டினை தெரிவித்து, இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

World Bank team appreciated Tamil Nadu govt for its Thozhi viduthi

இச்சந்திப்பின்போது, தமிழக முதல்வர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநரை வரவேற்று, தமிழகத்தின் வேளாண் கடன் திட்டத்துக்கு 1971-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்துக்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்தும், அப்போதிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது.

ஆதரவு தொடரும்: தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழகப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அதிகாரிகள், தெற்காசிய மண்டல துணைத் தலைவர் மார்டின் ரைசர், சர்வதேச நிதி நிறுவன Country Manager வெண்டி வெர்னர் (Wendy Werner), உலக வங்கியின் பங்கு நிதி நிறுவனங்களின் திட்டத் தலைவர் (Equity Finance Institutions, Program Leader) உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+