என்ன பெரிய அமெரிக்கா? இந்தியர்களிடம் எவ்வளவு தங்கம் இருக்கு தெரியுமா? ஒவ்வொரு வீடும் ரிசர்வ் பேங்க்!
சென்னை: உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், உலகில் அதிக தங்க கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் அமெரிக்கா இடம்பிடித்துள்ளது. அதனால் தான் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும் அமெரிக்கா வலுவாக உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு இந்திய குடும்பமும் இந்திய பொருளாதாரத்தை மறைமுகமாக தாங்கிப் பிடித்து வருகிறது.
தங்கம் இந்திய மக்களைப் பொறுத்தவரை கவுரவமாக பார்க்கப்பட்டாலும் உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தீர்மானிப்பதில் தங்கம் தான் பக்க பலமாக இருக்கிறது. திடீரென ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கினால் தங்கத்தை விற்று அந்த நெருக்கடியை சமாளித்து வருகின்றன.
அதனால்தான் உலக தங்க கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் பட்டியலை வெளியிட்டு வருகிறது அதில் வழக்கம் போல் அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா 8,133 டன் தங்க கையிருப்புடன் முதலிடத்தில் உள்ளது.

தங்க கையிருப்பு
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளிலும், நிதி சிக்கலின் போது, தங்கமே அமெரிக்காவின் பலமாக இருந்து வருகிறது. அமெரிக்கா வைத்திருக்கும் இத்தகைய பெரும் தங்க இருப்புதான், அதன் நாணயத்திற்கு (டாலர்) சர்வதேச சந்தையில் அதிக நம்பிக்கை உருவாக்குகிறது. ஏற்கனவே பலமுறை அமெரிக்கா பொருளாதார சிக்கல்களை சந்தித்தபோது தங்கம் தான் அதற்கு கை கொடுத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட போது அமெரிக்கா மீண்டு வர தங்கம் தான் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிடம் அதிக தங்கம் இருப்பதால்தான் டாலரில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்கின்றனர். அதனால் தான் உலக நிதி நிலையிலும் அமெரிக்கா வலுவாக இருக்கிறது.
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்
அடுத்து ஜெர்மனி 3,351 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி மீளெழுந்ததற்குப் பின்னணியில் இந்த தங்க கையிருப்பே ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது.
இத்தாலி 2,451 டன் தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடன் சுமைகள் அதிகரித்தபோதும், தங்கத்தை விற்று நாட்டின் பொருளாதாரத்தை சமாளித்தது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் 2,452 டன் தங்கத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்சின் தங்க கையிருப்பே யூரோவுக்கு வலுவை அளித்து, ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதி நிலையை உறுதியாக்குகிறது.
ரஷ்யா, சீனா
ரஷ்யா 2,333 டன் தங்கத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு எதிராக ரஷ்யாவை காப்பாற்றுவதும் தங்க கையிருப்பே. சீனா 2,292 டன் தங்கத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதன் பின் சுவிட்சர்லாந்து 1,040 டன் தங்கத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்தியா - 880 டன்
இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது 880 டன் தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உலகளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தங்க கையிருப்பு, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, உலகளாவிய நிதி நெருக்கடிகளின் போது தங்கம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கான ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
இந்திய மக்களிடம் தங்கம்
அரசின் கையிருப்பைத் தவிர, இந்திய மக்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவு தனிநபர்கள் கையிருப்பில் உள்ள தங்கமாகக் கருதப்படுகிறது. இந்த அளவிலான தங்க சேமிப்பு, இந்திய பொருளாதாரத்துக்கு மறைமுக பலத்தை அளிப்பதோடு, சர்வதேச சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. திருமணங்கள், பண்டிகைகள், முதலீடு போன்ற அனைத்திலும் தங்கத்திற்கு இந்தியர்கள் அளிக்கும் முக்கியத்துவம், உலக தங்க சந்தையையே பாதிக்கும் அளவிற்கு பெரும் தாக்கம் செலுத்துகிறது.
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரம் தடுமாறும் நேரங்களில், தங்கமே நாட்டு நாணயத்துக்கும், மக்களின் முதலீட்டுக்கும் பாதுகாப்பான அடித்தளமாக உள்ளது. அதனால், இந்தியாவிடம் உள்ள 880 டன் தங்க கையிருப்பும், மக்களிடம் இருக்கும் 25,000 டன் தங்கமும், இந்தியாவுக்கு ஒரு நிதி அரண் போன்று இருந்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை இந்த தங்கம் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்!












Click it and Unblock the Notifications