கல்லீரல் காலி.. டேஞ்சரஸ் கல்லீரல் அழற்சி நோய்.. குழந்தைகளுக்கு இந்த ஊசியை போடுங்க: தமிழக அரசு
சென்னை: கல்லீரல் அழற்சி நோய்களை ஒழிக்க, பிறக்கும் குழந்தைகளுக்கு மறக்காமல் ஹெபடைடிஸ் B தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம்தான், "கல்லீரல் அழற்சி" எனப்படுகிறது.. கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீரை சாப்பிடுவது போன்றவையே கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கான மூல காரணங்களாக உள்ளன.

அறிகுறிகள்: கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் என்ன தெரியுமா? காய்ச்சல், உடல் சோர்வு, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, ரத்த வாந்தி போன்றவையாகும்.
கல்லீரல் அழற்சியால் ஹெபடைடிஸ் A, E பாதிப்புகள் வரலாம்.. இதனால் கல்லீரல் செயலிழப்பும் ஏற்படலாம்.. ஹெபடைடிஸ் B, C வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கமும் ஏற்பட்டுவிடும்.. இதற்கு சிர்ரோசிஸ் என்பார்கள்.. சிர்ரோசிஸ் நிலை ஒருவருக்கு வந்துவிட்டால், அதை குணப்படுத்துவது கஷ்டமாம்.. இந்த பாதிப்பை சரி செய்யவும் முடியாதாம்.
பாதிப்புகள்: மொத்தத்தில், கல்லீரல் வேலை செய்யாமல் போனால், உடலிலுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்துவிடும்.. மயக்க நிலை, ரத்த வாந்தி ஏற்படலாம்... இதுவே தீவிரம் அடைந்து, மஞ்சள் காமாலையில் கொண்டுபோய் விட்டுவிடும். அத்துடன் ஹெபடைடிஸ் B காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
இந்த கல்லீரல் அழற்சி நோய்கள் ஹெபடைடிஸ் A, B, C, D, E என 5 வகைகள் இருந்தாலும், B, C - தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாம்.. இதில், ஹெபடைடிஸ் B-தடுப்பூசி இருக்கிறது.. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் ஹெபடைடிஸ் B மற்றும் C -யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதாவது வருடந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
வார்னிங்: மேலும், இந்த ஹெபடைடிஸ் பாதிப்பை கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ம் ஆண்டுகளில் HIV, காசநோய், மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது... அதனால்தான், கல்லீரல் அழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு வருடமும் ஜூலை 28ம் தேதி உலக ஹெபடைடிஸ் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கல்லீரலின் முக்கியத்துவத்தையும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் நோயைத் தடுக்கவும், 2030 ஹெபடைடிஸ் ஒழிப்பு இலக்குகளை அடையவும், வைரஸ் ஹெபடைடிஸ் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுமே இந்த கல்லீரல் அழற்சி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கல்லீரல் அழற்சி: எப்படியும் 2030-க்குள் இந்த நோயை ஒழிக்க தேசிய ஹெபிடைடிஸ் B ஒழிப்புத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகக் கல்லீரல் அழற்சி தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருள் "இது செயல்பாட்டுக்கான நேரம்" என்பதாகும்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சொல்லும்போது, "உலக கல்லீரல் அழற்சி நோய் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கல்லீரல் அழற்சிக்கான ஹெபடைடிஸ் B தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தைகள்: அதேபோல், பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமைமருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் B தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலும், 6-வது வாரம், 10-வது வாரம்,14-வது வாரம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெண்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபடைடிஸ் B தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கல்லீரல் அழற்சி நோய்க்கான முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை உள்ளது. கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் B தடுப்பூசியை செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications