ஸ்டிரெய்ட்டா.. ஸ்டிராவை எங்க வச்சிருக்கார் பாருங்க.. நோட் பண்ணுங்கப்பா.. தாத்தா சேட்டை.. க்யூட் லவ்!
காதலை வெளிப்படுத்தும் முதிய தம்பதியின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: காதலுக்கு கண் இல்லைன்னு சொன்னதெல்லாம் அந்தக் காலம்.. இப்பெல்லாம் வயசும் கிடையாது.. அப்படித்தான் இந்த தாத்தாவும்.. அறிவியல்பூர்வமாகவெல்லாம் இந்த விஷயத்தை பாக்காதீங்க.. ஆனால், செம ரொமான்ட்டிக்கான தாத்தாவாக இருப்பார் போலருக்கு.. இளசுகளுக்கு டஃப் தருகிறார்.
குட்டி வாண்டுகள் முதல் கோலூன்றும் தாத்தாக்கள் வரை லவ்வில் திளைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் செம தினுசான ஒரு லவ் சீன் நம்ம கண்ணில் பட்டது.
அடடே.. இப்படியெல்லாம் கூட பாசத்தை, காதலை, நேசத்தை, பிரியத்தை, அன்பை வெளிப்படுத்த முடியுமா? இத்தனை காலம் இது நமக்கு தெரியாம போயிருச்சேய்யா என்றுதான் இதைப் பார்த்ததுமே நமக்குத் தோன்றியது.

ஜாலியோ ஜாலி
இதுதாங்க சீன்..... ஒரு தாத்தா உட்கார்ந்திருக்கிறார்.. அவருக்கு அருகே எதிராக இன்னொரு பாட்டி இருக்கிறார். கணவன் மனைவியாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால், இவர்கள் எந்த ஊர் என்று தெரியவில்லை. தாத்தா பாட்டி பெயரும் தெரியவில்லை... ஆனால் கன்பர்ம்டாக இது வட இந்தியா போலத்தான் தெரிகிறது... ஜாலியாக காத்து வாங்கியபடி உட்கார்ந்துள்ளனர் 2 பேரும்.

கண்ணாடி கிண்ணம்
அந்த பாட்டி கையில் ஒரு சின்ன கண்ணாடி "பவுல்" உள்ளது. அதாங்க கிண்ணம் வைத்திருக்கிறார்.. அதில் ஜூஸோ அல்லது பாயாசமோ அல்லது ஏதோ ஒரு பானம் உள்ளது... அது குளிர்பானமா அல்லது சூடான சூப்பா என்றும் தெரியவில்லை.. பிரவுன் கலரில் பார்க்கவே சூப்பராக இருக்கிறது. அதைப் பாட்டி, ஸ்டிரா போட்டு உறிஞ்சிக் குடிக்கிறார்.. அவருக்கு எதிரில் தாத்தா உட்கார்ந்துள்ளார்.. இதுவரைக்கும் எல்லாம் ஓகேதான்..

ஸ்ட்டிரா
அப்படியே கட் செய்து தாத்தா பக்கம் நாம போலாம்.. தாத்தா வாயிலும் ஒரு ஸ்டிரா இருக்கிறது. ஆனால் அது பாட்டி வைத்துள்ள "பவுல்" பக்கம் போகவில்லை... மாறாக பாட்டி வாய்ப் பக்கம் நீள்கிறது.. அதாவது பாட்டி கிண்ணத்திலிருந்து அந்த பானத்தை குடிக்கிறார் என்றால், தாத்தாவோ.. பாட்டி வாயிலிலிருந்து டைரக்டாக அதை உறிஞ்சுகிறார்.. இப்படி ஒரு காட்சியை உலகின் எந்த சினிமாவிலும் நாம் பார்த்திருக்க முடியாது.. பார்க்கவும் வாய்ப்பே இல்லை.. பார்க்கவே படுஆச்சரியமாக இருக்கிறது இந்த க்யூட் லவ் ஜோடியின் க்யூட்டஸ்ட் காதல்.

நோட் பண்ணுங்கப்பா
Scientific ஆக சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.. மாறாக செம romantic ஆக இது இருக்கிறது.. இதுதொடர்பான ஒரு வீடியோ செம வைரலாக பரவி வருகிறது. அடடா.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. லவ் பண்ணா இப்படி பண்ணுங்கப்பா என்று விவேக் பாணியில் பலரும் இதைப் பாராட்டி ரசித்து வருகின்றனர்... "மைக்" மோகன் காலத்தில் எல்லாம் ஒரே இளநியில் ரெண்டு ஸ்டிரா போட்டு குடித்து காதல் வளர்த்தார்கள்.. இப்போதோ.. டைரக்டா வாய்க்கே ஸ்டிரா போட ஆரம்பித்து விட்டார்கள்.. அடுத்து என்னெல்லாம் பண்ணப் போறாங்களோ.. இதையெல்லாம் பார்த்து 90 களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications