ஒன்இந்தியா தமிழில் ஜோதிட தொடர் எழுதும் பெர்னாட்ஷாவின் புத்தக வெளியீட்டு விழா.. மலேசியாவில் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் பெர்னாட்ஷா ஒன் இந்தியா தமிழில் ஜோதிட தொடர் எழுதி வருகிறார். இவர் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வருகிற 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஒன் இந்தியா தமிழில் ஜோதிட தொடர் எழுதி வருபவர் கவிஞர் பெர்னாட்ஷா. இவர் மனிதம் தேடும் மனிதன் என்கிற பெயரில் கவிதை நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா மலேசியாவில் வருகிற 29.9.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.

Bernatsha Book

மலேசிய கண்ணதாசன் அறவாரிய அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்கிறது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான எம். சரவணன் கவிதை நூலை வெளியிடுகிறார். மாலை 3 மணியளவில் தொடங்கி, 5 மணி வரை இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தேநீர் உபசரிப்பு நடைபெறும். இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், மலேசிய கண்ணதாசன் அற வாரிய செயலாளர் கார்த்திக், சிந்தனைக் கவிஞர் சீராகி, வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரன் பெருமாள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+